ஜோக்கர் கதாபாத்திரத்தில்.. தல அஜித் நடிச்சா தாறுமாறா இருக்கும்.. சொன்னது யார் தெரியுமா?

சென்னை: ஜோக்கர் கதாபாத்திரத்தில் தல அஜித் நடித்தால் தாறுமாறாக இருக்கும் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

தல அஜித்தின் வலிமை படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பு பணிகளை துவங்க முடியாமல் படக்குழு தவித்து வருகிறது.

வெற்றி ஆண்டு

வெற்றி ஆண்டு

கடந்த ஆண்டு தல அஜித்துக்கு வேற லெவல் வெற்றி ஆண்டாக இருந்தது என்றே சொல்லலாம். ஒரே ஆண்டில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்கள் வெளியாகி மெகா ஹிட் அடித்தன. விஸ்வாசம் படத்தில் மாஸாகவும், நேர்கொண்ட பார்வை படத்தில் கிளாஸாகவும் தல அஜித் நடித்து இருந்தார்.

ஒன்றாக இணைந்து

ஒன்றாக இணைந்து

தல அஜித்துடன் இணைந்து நீ வருவாய் என, உன்னை கொடு என்னை தருவேன் ஆகிய இரண்டு படங்களில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில், நிச்சயமாக நடிப்பேன். ஆனால், என்னை காட்டிலும், அவருக்கு வில்லனாக நடிக்க சிறப்பான நடிகர் ஒருவர் இருக்கிறார், அது அவர் தான் என தனது ஸ்டைலில் கூறியுள்ளார்.

ஜோக்கராக

ஜோக்கராக

இயக்குநராகவும், ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வருகிறார் பார்த்திபன். சமீபத்தில் அஜித் குறித்த கேள்விக்கு, ஜோக்கர் போன்ற மிரட்டலான வில்லன் ரோலில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஜோக்வின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Vijay Sethupathi Tuglaq Darbar கதை, Manjima ஏன் தங்கச்சி
வாலி

வாலி

எஸ்.ஜே. சூர்யாவின் வாலி படத்திலேயே ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிகர் அஜித் மிரட்டி எடுத்திருப்பார். அதுபோல, இன்னும் ஒரு படம் அமைந்தால் சூப்பராக இருக்கும் என பார்த்திபன் கூறியுள்ளார். மேலும், வில்லன், சிட்டிசன், ரெட், அமர்க்களம், அட்டகாசம், வேதாளம், மங்காத்தா என பல படங்களில் நெகட்டிவ் ஷேட்களில் பக்காவாக நடித்து மிரட்டி இருப்பார் தல அஜித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X