அப்போ குஷ்பு.. இப்போ ஐஸ்வர்யா ராஜேஷ்.. வரிசையா ஹீரோயின்களுக்கு ஐஸ் வைக்கும் பார்த்திபன்!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என ஆல் ரவுண்டராக தமிழ் சினிமாவில் வலம் வரும் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு அவரை வர்ணித்துள்ளார்.
பல புதிய பாதைகளை போட்ட நடிகர் பார்த்திபன், கடந்த ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 எனும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் பார்த்திபன், சிங்கிள் ஷாட் படமாக 'இரவின் நிழல்' படத்தையும் இயக்கி வருகிறார்.

மிஸ்ஸான ஆஸ்கர்
தமிழ் சினிமாவில் புது முயற்சியாக ஒரே ஆள் மட்டும் நடித்த படமாக பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியானது. தியேட்டரில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆன பிறகு, பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் என எதிர்பார்த்து, பல முயற்சிகளை பார்த்திபன் செய்தும், தேர்வாகவில்லை.

ஐஸ்வர்யா ராய் ஜோடி
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் அமரர் கல்கியின் காவியமான பொன்னியின் செல்வன் படத்தில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து வருகிறார். கதைப்படி இவரைத்தான் நந்தினி தேவியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் மணப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு உதட்டில்
பிரபல புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம் கை வண்ணத்தில், இந்த மாத தொடக்கத்தில் சமந்தா, ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகைகள் ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறி இருந்தனர். அதில், குஷ்புவின் புகைப்படத்தை ஷேர் செய்த பார்த்திபன், "தட்டில் பழங்களும்- உதட்டில் தட்டுப்படும் புன்னகையும் சுவை!" என வர்ணித்திருந்தார்.

சிங்கிள் ஷாட் மூவி
ஒரு ஆள், பல குரல்கள் என வித்தியாசமன முயற்சியாக ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி, விருதுகள் கிடைக்கவில்லையே என வருந்தி நிற்கும் பார்த்திபன், இன்னமும், வித்தியாசமாக உழைத்து, விருதுகளை தன்னைத் தேடி வரவைக்க அடுத்த கட்ட முயற்சியில் இறங்கி உள்ளார். 3 ஆஸ்கர் விருதை குவித்த 1917 படத்தை போல சிங்கிள் ஷாட் மூவியாக "இரவின் நிழல்" படத்தை இயக்கி வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுடன்
தொடர்ந்து, சமூக வலைதளத்தில், ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரவின் நிழல் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப் போகிறார் என்பதை தான் சூசகமாக பார்த்திபன் அறிவித்துள்ளார் என கமெண்ட்டுகள் வருகின்றன.
ஐஸுக்கே ஐஸ்
கடந்த பிப்ரவரி 4ம் தேதி பார்த்திபன் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை வர்ணித்த நிலையில், தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் எடுத்த செல்ஃபிக்கு கேப்ஷனாக, "The girl next door மாதிரி இல்லாமல் the girl inside our doors போல... தன்மையான,எளிமையான திறமையான ஐஸ்வர்யா ராஜேஷ்!" என ஐஸ் வைத்துள்ளார்.
உடம்பை குறைங்க
ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தில், பார்த்திபன் ஓவர் வெயிட் போட்டது போல தெரிகிறது. அதனை பார்த்த இந்த ரசிகர், " புதிய பாதைல இருந்து பாக்குறேன் தவறா எடுத்து கொள்ள வேண்டாம் கொஞ்சம் உடம்ப குறைக்க வேண்டும். ஆரோக்கியத்துகாக நீங்க மீண்டும் இதே உடம்புடன் வரணும்" என அன்புடன் அட்வைஸ் செய்துள்ளார்.
அடுத்த பட ஹீரோயின்
"திரு காதல் கிறுக்கன் பார்த்திபன் சார் உங்களுடைய அடுத்த படைப்பில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக போடுங்கள்.. வாழ்க வளமுடன்" என இந்த ரசிகர் சொல்வது போலவே, பலரும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவரும் அதே ஐடியாவில் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வண்டிய ஏத்து
பார்த்திபன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், "ஐஸ்வர்யா ராஜேஷை வண்டியில ஏத்து.. பார்த்திபன் மேல வண்டிய ஏத்து" என பங்கமாக கலாய்த்துள்ளார். அதனை ரசித்த, பார்த்திபன், "எனக்கேவா? சரிரீரீ" என பதில் கமெண்ட்டும் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











