twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் (கள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்… கமலுக்கு வித்தியாசமாக ஆறுதல் கூறிய பார்த்திபன் !

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் கடும் போராட்டத்திற்கு பிறகு தோல்வி அடைந்தார்

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆயிரம் வாக்குகளுக்கு மேல் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ

    கமலுக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    கோவை தெற்குத் தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டார் . இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கினார். பா.ஜ.க தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசனும் போட்டியிட்டார் .

    மாறி மாறி முடிவுகள்

    மாறி மாறி முடிவுகள்

    தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே இம்மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதே நிலைதான் வாக்கு எண்ணிக்கையின் போதும் நிலவியது. நேற்று நடத்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே கமல் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் திடீரென பின்னடைவை சந்தித்தார். மீண்டும் முன்னிலை பின்னடைவு என மாறி மாறி முடிவுகள் வந்து கொண்டு இருந்தன.

    வெற்றி பெற்றார்

    வெற்றி பெற்றார்

    22 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, கமலையும், மயூரா ஜெயக்குமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி முன்னேறினார். 25,26 என கடைசி சுற்றில் ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வானதி சீனிவாசன் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையே மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தார்.

    வாழ்த்திய பார்த்திபன்

    வாழ்த்திய பார்த்திபன்

    காலையில் கமல் முன்னிலையில் இருந்த போது முதல் ஆளாக " kaMaL A'' என எம்.எல்.ஏ கமல் என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். ஆனால்,நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார்.

    பேராண்மையுடன் நின்றதே

    பேராண்மையுடன் நின்றதே

    இதையடுத்து கமலுக்கு ஆறுதல் கூறும் வகையில் பார்த்திபன் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வெற்றி தோல்வி எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் (கள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே எனக் கூறியுள்ளார்.

    English summary
    Parthiban tweet about Kamal Haasan's defeat in the election
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X