»   »  அரசியல்வாதிகளை பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பார்த்திபன்: எதிர்ப்பார்களோ?

அரசியல்வாதிகளை பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பார்த்திபன்: எதிர்ப்பார்களோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரசியல்வாதிகளை பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே பார்த்திபன்- வீடியோ

சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இன்று போட்டுள்ள ட்வீட்டை பார்த்து அரசியல்வாதிகளுக்கு ரோஷம் வருமா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நச்சு, நச்சுன்னு ட்வீட் போடுகிறார். நேற்று தான் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இன்று நேரடியாக அரசியல்வாதிகளை தாக்கி ட்வீட்டியுள்ளார்.

காக்கைகள்


யாகாவாராயினும் நா காக்க-அன்னியர்
நா மீது பல் போட்டு பேசிய வாக்கை காக்க ....
எது பத்தியும் கவலைக்கொள்ளாமல்
அறுபத்தி நாலு வருடங்களாக இந்தியர்களின் வாக்கை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள்!!! என ட்வீட்டியுள்ளார் பார்த்திபன்.

இந்தியா

இந்தியா

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ராஸ்கல்கள், ரவுடிகள் கையில் அதிகாரம் செல்லும். நீர், காற்றுக்கு கூட வரிவிதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும் என்று முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதை நினைவுகூர்ந்துள்ளார் பார்த்திபன்.

கழுவி ஊத்தலா

இவ்ளோ காலைலயே கழுவி ஊத்தலா இன்னும் கொச்சையா கேளுங்க சார் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

கரையான்கள்

இந்தியர்கள் கடுமையாக உழைப்பார்கள் ஆனால் முன்னேற்றம் பற்றி சிந்திக்க தெரியாதவர்கள். யாரையும் வீழ்த்தும் ஆற்றல் உடையவர்கள் ஆனால் இலக்குகள் இல்லாதவர்கள். நன்றி அண்ணா! அவர்கள் காக்கை அல்ல கரையான்கள். நம் நாட்டை அரி(ழி)த்த கரையான்கள்.

English summary
Actor cum director Parthiban has blasted the politicians in a tweet in his own unique manner. Fans who have seen the tweet are appreciating him for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil