“ஒத்த செருப்பு பத்தாது, என்னை ரெண்டு செருப்பாலதான் அடிக்கணும்”.. நொந்து போய் டிவீட்டிய பார்த்திபன்

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டதால் சோகத்தில் இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.

Recommended Video

என் குடும்ப பிரச்சன இப்போ எதுக்கு |ACTOR PARTHIBAN |THITTAM POATTU THIRUDURA KOOTAM |FILMIBEAT TAMIL

சென்னை: ஒத்த செருப்பு படத்தை எடுத்தற்காக தன்னை தானே ரெண்டு செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என நடிகர் பார்த்திபன் கோபமாக டிவீட்டி செய்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தை ஒற்றை ஆளாக அவர் தனது தோளில் சுமந்துள்ளார். படம் முழுவதும் அவர் மட்டுமே நடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

Parthiban very angry on tamil rockers for OS7 piracy

இப்படம் கடந்த 20ம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒத்த செருப்பு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் வசூல் ரீதியாக பெரிய அளவில் சோபிக்கவில்லை.

தற்போது போது தான் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. வரும் 27ம் தேதி சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டி பிள்ளை திரைப்படம் வெளியாகிறது. காப்பான் படமும் நல்ல வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், ஒத்த செருப்பு படத்தின் காட்சிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு ஏற்கனவே இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் சூழ்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் படத்தை இணையத்தில் வெளியிட்டு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பார்த்திபன் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும்,பார்ப்பதும் அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X