Teenz Teaser: பார்த்திபன் என்னப்பா இப்படி பயமுறுத்துறாரு.. ஹாரர் ஸ்டைலில் வெளியான டீன்ஸ் டீசர்!
சென்னை: இரவின் நிழல் படத்திற்கு பிறகு அடுத்து ஒரு எக்ஸ்பீரிமென்ட்டல் படத்தை தான் பார்த்திபன் கொடுக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. டீன்ஸ் என டைட்டில் வைத்தது மட்டுமின்றி பதின்ம வயது சிறார்களையே முன்னணி ரோலில் நடிக்க வைத்துள்ளார்.
குழந்தைகளுக்கான படமாக டீன்ஸ் வரப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் தற்போது வெளியாகியிருக்கும் டீன்ஸ் டீசர் வித்தியாசமான அனுபவத்தையே கொடுக்கும்.

அரண்மனை 4 டிரெய்லர் நேற்று தான் வெளியான நிலையில், தமிழில் இன்னொரு ஹாரர் படமாக டீன்ஸ் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால், வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல் பார்த்திபனுக்கே உரித்தான முறையில் டீசர் வித்தியாசமாக மிரட்டுகிறது.
சிங்கிள் ஷாட் படம்: உலகின் பிரபல இயக்குநர்களே சிங்கிள் ஷாட்டில் படங்களை இயக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அப்படியொரு படத்தை அதிக நடிகர்களை வைத்து ஒரு மனிதனின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என அனைத்தையும் எந்தவொரு கட்டும் இல்லாமல் நான் லீனியர் பாணியில் சொல்ல முடியும் என்பதை காட்டி அசத்தினார். இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் மிகப்பெரிய பலமாக இருந்தார்.
பெரிதாக ஓடவில்லை: ஆனால், பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் படம் எக்ஸ்பிரீமென்ட் படமாக வெளியானாலும், ரசிகர்களை பெரிதும் அந்த படம் கவரவில்லை. மேலும், விருதுகளையும் குவிக்க முடியாமல் இரவின் நிழல் தடுமாறியது. இதை விட இதற்கு முன் பார்த்திபன் எடுத்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தரமான படம் என விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.
டீன்ஸ் டீசர்: இந்நிலையில், பார்த்திபனின் அடுத்த படமான டீன்ஸ் டீசர் வெளியாகி இருக்கிறது. 500 ஆண்டுகால பழமையான கிணற்றில் கயிறு போட்டு இரைக்க முயன்றால் கயிறு வராமல் அப்படியே நிற்கும், அப்போ உள்ளே பேய் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளாமல் என சரியான பில்டப்புடன் டீன்ஸ் டீசர் வெளியாகி இருக்கிறது. டி. இமான் இசை டிரெய்லரிலேயே ஹாரர் அனுபவத்தை சரியாக கடத்துகிறது. விஷுவலாகவும் ஒவ்வொரு ஃபிரேமும் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் உள்ளது. விரைவில், டீன்ஸ் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் பார்த்திபன் இறங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











