twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்!

    By
    |

    சென்னை: மதுரை சலூன் கடைகாரர் மற்றும் அவர் மகளின் சேவையை பாராட்டிய நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன், கல்விச் செலவை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    மகள் படிப்புக்கான ரூ.5 லட்சத்தை உதவிக்கு அளித்த சலூன் கடைகாரர்.. படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்

    கொரோன வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    இந்த ஊரடங்கு இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

    மாஸ்டர் படத்துல நடிச்ச பிறகு.. நான் 'அவருடைய' ஃபேன் ஆயிட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!மாஸ்டர் படத்துல நடிச்ச பிறகு.. நான் 'அவருடைய' ஃபேன் ஆயிட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!

    தொண்டு நிறுவனங்கள்

    தொண்டு நிறுவனங்கள்

    அவர்களுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதையடுத்து பலர், தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு, பணமாகவோ நிவாரணப் பொருட்களாகவோ வழங்கி வருகின்றனர். இந்தியா முழுவதும் நடிகர், நடிகைகள், தொண்டு நிறுவனங்கள் இந்த உதவிகளை செய்து வருகிறது. தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில், மதுரையில் உள்ள மாணவி ஒருவர் தனது கல்விக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் ரூபாயை தினக்கூலி தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவுமாறு தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் பார்த்திபர், அவர் கல்வி செலவை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தினக்கூலி

    தினக்கூலி

    மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனா பாதிப்பால் முழுவதும் முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

    அனுமதி பெற்று

    அனுமதி பெற்று

    தனது மகளின் மேற்படிப்புக்கு பல வருடங்களாக சிறுக சிறுகச் சேர்த்து, சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா, அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 60௦0-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார்.

    இன்ப அதிர்ச்சி

    இன்ப அதிர்ச்சி

    இது இணையவழி வந்த காணொளி செய்தி. இந்த செய்தி என்னை பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்துக் கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க நினைத்தேன்.

    மனிதநேய மன்றம்

    மனிதநேய மன்றம்

    அதன்படி அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் நண்பர் சுந்தர் மூலம் இன்று கொடுத்தனுப்பி எனது பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன். மேலும், நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

    மன நிறைவு

    மன நிறைவு

    வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். பார்த்திபன் மனித நேய மன்றத்தின் சார்பாக இது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மன நிறைவை அளித்தது என்று நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Parthieban salutes Madurai Melamadai Hairdresser Mohan & family, especially daughter Nethra for their selfless humanitarian service and pledges her educational support
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X