ஆஹா, ஆஹஹஹா... ஒத்த செருப்புக்குப் பிறகு புதுமை இயக்குனரின் அடுத்த அதிரடி... ஆசியாவிலேயே பர்ஸ்டாமே

By

சென்னை: புதுமை இயக்குனர் பார்த்திபன் அடுத்த அதிரடிக்குத் தயாராகி விட்டார். அவர் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுக்க உள்ளார்.

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த வருடம், ஒத்த செருப்பு படத்தை இயக்கி, அவர் மட்டுமே நடித்திருந்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றது. அடுத்து பார்த்திபன் புதிய படமொன்றை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே இயக்கியும் வருகிறார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இந்தப் படத்தின் டைட்டிலை இயக்குனர் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டார். இரவின் நிழல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் பற்றி அவர், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

உலக இயக்குனர்

உலக இயக்குனர்

அதில், ஒத்த செருப்பு மூலம் தமிழக இயக்குனர்கள் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்டவர் என் பாசத்துக்குரிய பார்த்திபன். இனிய புத்தாண்டு அன்று தொடங்கும் இரவின் நிழல், உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் நிச்சயம். வாழ்த்துகள். இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஒரே ஷாட்டில்

ஒரே ஷாட்டில்

இந்தப் படம் பற்றி பார்த்திபன் கூறும்போது, ஐந்து வருடத்துக்கு முன் இந்த ஐடியா எனக்குத் தோன்றியது. இப்போதுதான் நடைமுறைக்கு வருகிறது. இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம். நான் இயக்கி நடிக்கிறேன். மேலும் சில நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது என்றார். ஆசியாவிலேயே, இப்படி ஒரே ஷாட்டில் முழு படமும் எடுக்கப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

பார்த்திபன், வடிவேலு

பார்த்திபன், வடிவேலு

வடிவேலுவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் பார்த்திபன். இதனால் இருவரும் நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. 'இரவின் நிழல்' படம் முடிவடைந்த பிறகு இருவரும் இணைந்து வேறு படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X