'இங்க வந்தும் விசாரிங்க.. லாக்டவுன்ல கூட போதைப் பொருள் பார்ட்டி..' விஷால் பட நடிகை பகீர் புகார்!

By

ஐதராபாத்: லாக்டவுன் நேரத்தில் கூட போதைப் பொருள் பார்ட்டிகள் நடந்திருப்பதாக விஷால் பட நடிகை புகார் கூறியுள்ளார்.

பெங்களூரில் சினிமா துறையினருக்கு போதைப் பொருள் விற்றதாக டிவி நடிகை அனிதா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கன்னட சினிமா துறையினருக்கு போதைப் பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடிகைகள் ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் உள்ள அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டிலும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் சகோதரரும் சுஷாந்த் சிங் வீட்டின் மானேஜர் சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங்

போதைப் பொருள் பயன்படுத்துவதாக நடிகைகள் சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் உள்பட 25 பாலிவுட் பிரபலங்கள் பெயரை நடிகை ரியா, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் நடிகை ரியா தெரிவித்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகை மாதவி லதா

நடிகை மாதவி லதா

இதற்கிடையே, நடிகை மாதவி லதா, தெலுங்கு சினிமாவிலும் போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது. சில பார்ட்டிகள், போதைப் பொருள் இல்லாமல் நடக்காது என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில், இப்போது அவர் கூறியிருப்பதாவது: பாலிவுட்டில் போதை பொருள் பழக்கம் இருப்பது ரகசியம் அல்ல. தெலங்கானாவில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டோலிவுட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.

லாக்டவுன் நேரத்தில்

லாக்டவுன் நேரத்தில்

இதற்கு முன் நடந்தது போல இல்லாமல், போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை விசாரித்து உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டும். போதைப் பொருள்களோடு நடக்கும் பார்ட்டிகள், இங்கு சர்வ சாதாரணம். இந்த லாக்டவுன் நேரத்திலும் கூட நடந்துள்ளது. அதனால் இங்குள்ள திரையுலகினர் மீது அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Recommended Video

Bindhu Madhavi Waiting for Simbu's Wife | Simbhu Bold Statement
பெரிய மாஃபியா

பெரிய மாஃபியா

போதைப் பொருள் விநியோகத்தின் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா இருப்பதாக நம்புகிறேன். சினிமா நடிகர், நடிகைகள் தங்கள் பொறுப்புகளை உணர வேண்டும். போதைப் பொருள் தடுப்புப்பிரிவு, பாலிவுட்டில் நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் இதைப் பேசுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். தெலுங்கு நடிகையான மாதவி லதா, தமிழில் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X