பார்ட்னர் நீ வெட்கப்படுறீயா.. வரலக்ஷ்மியின் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்த்த பிரசன்னா!
சென்னை: தெலுங்கு படமான நந்தி படத்தின் லுக்கை தனது ரசிகர்களுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஷேர் செய்துள்ளார்.
டீச்சர் போல புடவை கட்டிக் கொண்டு, நாணமே உருவான பெண்ணாக வெட்கப் பட்டு தரையை தலை பார்க்கும் போட்டோவை வரலக்ஷ்மி ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
வரலக்ஷ்மியின் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரசன்னா, பார்ட்னர் நீ வெட்கப்படுறீயா என பங்கமாக கலாய்த்துள்ளார்.

செம போல்டு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரீலில் மட்டும் இன்றி ரியலிலும் வரலக்ஷ்மி செம்ம போல்டான பொண்ணு தான்.

ஒரே வருடத்தில்
2018ம் ஆண்டு ஒரே வருடத்தில் எச்சரிக்கை இது மனிதர்கள் வாழும் இடம், மிஸ்டர் சந்திரமெளலி, மாரி 2, சண்டக்கோழி 2, சர்கார் என 5 படங்கள் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியானது. 2019ல் ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியான நீயா 2 படத்திலும் முக்கிய ரோலில் வரு நடித்திருந்தார்.

தெலுங்கில் பிஸி
2019ம் ஆண்டு தமிழில் நீயா 2 படத்தை தவிர வரலக்ஷ்மி நடிப்பில் வேற எந்த படங்களும் வெளியாகவில்லை. கன்னி ராசி, வெல்வட் நகரம், காட்டேரி உள்ளிட்ட படங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கின்றன. இந்நிலையில், தெலுங்கில் உருவாகி வரும் நந்தி படத்தில் பிசியாக வரலக்ஷ்மி நடித்து வருகிறார்.
வெட்கத்துடன்
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் குனிந்த தலை நிமிராமல், வெட்கத்துடன் சேலையில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், க்யூட்டா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரசன்னா கலாய்
வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரசன்னா, பார்ட்னர், நீ வெட்கப்படுறீயா? எப்படி? என எமோஜிகளை போட்டு செம்ம கலாய் கலாய்த்துள்ளார். ஆனால், பார்ட்னர் என அவர் போட்டுள்ளதை சினேகா மேம் நோட் பண்ணாமல் இருக்கணும்.. ஏதோ நம்மளால முடிஞ்சது!
அதனால் தான்
உங்களை போன்றவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கலாய்ப்பீர்கள் என நினைத்தது தான், நந்தி ஷூட்டிங்கில் ஒரு நாள் என போட்டிருக்கிறேன் என பிரசன்னாவுக்கு பதில் அளித்துள்ளார். அவரது இந்த ரிப்ளையை பார்த்த பிரசன்னா, இதுபோன்ற பல நாட்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என பதிவிட, தேங்க்யூ என ரிப்ளை செய்துள்ளார் வரலக்ஷ்மி.
நிர்வாணமாக
அறிமுக இயக்குநர் விஜய் கனகமேதலா இயக்கத்தில் அல்லரி நரேஷ் நடிப்பில் உருவாகி வரும் நந்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்த போஸ்டரில், நிர்வாணமாக தலை கீழாக கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், அல்லரி நரேஷ் போஸ் கொடுத்திருந்தார். இந்த படத்தில் தான் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











