Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பார்ட்டி டீஸர் வெளியீடு: வெங்கட் பிரபு அவ்ளோ நல்லவரெல்லாம் கிடையாதே!
Recommended Video
சென்னை: பார்ட்டி பட டீஸரை பார்த்தவர்கள் வெங்கட் பிரபு வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
வெங்கட் பிரபு படங்களில் கேலி, கிண்டல் தூக்கலாக இருக்கும். இந்நிலையில் அவர் மிர்ச்சி சிவா, ஜெய், ரெஜினா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள பார்ட்டி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
டீஸர் மோடி அறிவிப்புடன் துவங்கி அதே அறிவிப்புடன் முடிகிறது.
கிண்டல்
பணமதிப்பிழப்பு குறித்து மோடி அறிவிப்பு வெளியிட்டதை டீஸரில் காண்பித்துள்ளார் வெங்கட் பிரபு. இதில் ஏதோ உள்குத்து இருக்கு, வெங்கட் பிரபு அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாது. வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
சத்யராஜ்
பாகுபலி படத்தில் கம்பீரமாக வந்த சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் பார்ட்டிக்கு சென்றால் இப்படித் தான் இருக்கும் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
பாண்ட்
டீஸரில் மிர்ச்சி சிவா வழக்கம் போன்று தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். பாண்ட் எங்கே என்று ஆளாளுக்கு சிவாவிடம் கேட்கிறார்கள்? யாருய்யா அந்த பாண்டு? . டீஸரை பார்த்தவர்கள் படம் நிச்சயம் ஜாலியாக இருக்கும் என்று சிலரும், இது என்ன பிட்டு படமா என சிலரும் தெரிவித்துள்ளனர்.
|
ஜாலி
பார்ட்டி டீசர் . படம் செம ஜாலியா இருக்கும் போல 😂
# பிரேம்ஜி பிஜிஎம் சூப்பரா இருக்கு. @Premgiamaren 👌 #PartyTeaser