»   »  பருத்தி வீரனை எதிர்த்து வழக்கு

பருத்தி வீரனை எதிர்த்து வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படத்தில் மலைக் குறவர் இனத்தவரை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள்சித்தரிக்கப்பட்டுள்ளதால் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மலைக்குறவர் மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ளமனுவில், அமீர் இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிப்பில் பருத்தி வீரன் படம் தயாரிக்கப்பட்டுவெளியாகியுள்ளது. தமிழகம்மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் மலைக்குறவர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும், குறவர் சமுதாயத்திற்கும், இன்னொருசமுதாயத்திற்கும் இடையே பகையை மூட்டும் வகையிலும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

மலைக்குறவர் இனம் பழங்குடியினமாகும். மத்திய, மாநில அரசுகள் இவர்களுடைய நலனுக்காகப் பாடுபட்டுவருகின்றன.

இப்படத்தில் குறத்தி என்ற சொல்லை 5 இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு போலீஸார் சேர்ந்துபன்றியைத் தூக்கிச் செல்வது போல காட்சி வைத்துள்ளனர். வன்முறைச் சம்பவங்கள், கற்பழிப்புக் காட்சிகளும்இடம் பெற்றுள்ளன.

இந்தக் காட்சிகளும், பயன்படுத்தியுள்ள சொற்களும் குறவர் இனத்தை புண்படுத்தும் வகையிலும், அவர்களதுநன்மதிப்பை சிதைக்கும் வகையிலும் உள்ளது.

எனவே இந்த வழக்கு முடியும் வரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும். மலைக்குறவர் சமுதாயம்தொடர்பான காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil