ParuthiVeeran: ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்... அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமா..? ரெடியாகும் அமீர் கேங்!

சென்னை: பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்தப் படத்தால் ஒரு பரபரப்பு ஏற்படும் என தெரிகிறது. அதாவது அமீரின் பருத்திவீரன் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்
அமீரின் பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தது. கார்த்தியுடன் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தமிழ் சினிமாவில் ஆல்டைம் கல்ட் க்ளாஸிக் சினிமாவாக பருத்திவீரன் கொண்டாடப்படுகிறது.

 ParuthiVeeran: Ameer Paruthiveeran film is reportedly going to be re-release soon

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. அதாவது படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா மிரட்டி வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது பருத்திவீரன் படத்தை அமீர் தான் தயாரித்ததாகவும், ஆனால், கடைசியில் ஞானவேல்ராஜா முழு தொகை கொடுக்காமல் எழுதி வாங்கிவிட்டதாக அமீர் கூறியிருந்தார். அதனால் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்த ஞானவேல்ராஜா, அமீர் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் அமீரை திருடன் எனவும் ஞானாவேல்ராஜா பேசியதால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து பாரதிராஜா, கரு பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இதனால் அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் மட்டும் தெரிவித்தார் ஞானவேல்ராஜா. அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் குறித்து ஏதும் உறுதியளிக்கவில்லை. பருத்திவீரன் பிரச்சினை உச்சம் இருந்த நேரத்தில், இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அல்லது பருத்திவீரன் ஓடிடி ரைட்ஸை இப்போதாவது விற்பனை செய்யலாம் என கூறி வந்தனர்.

இந்நிலையில் பருத்திவீரன் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்திவீரன் ரைட்ஸ் ஸ்டூடியோ க்ரீன் வசம் உள்ளது. இப்போது மீண்டும் இந்தப் படத்தை வெளியிட்டால் அதில் ஞானவேல்ராஜாவுக்கு தான் லாபம். அதனால் பருத்திவீரன் ரீ-ரிலீஸாகவிருந்தால் அதற்கு அமீரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X