paruthiveeran issue: நன்றி கெட்ட துரோகி.. அமீருக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

சென்னை: பருத்திவீரன் பட பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாகி உள்ள நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

பருத்தி வீரன் படம் வெளியான போது, நடந்த பல பிரச்சனைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து மோதல் உருவாகி அது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

paruthiveeran issue, suriya fans poster against ameer

பருத்திவீரன் பிரச்சனை: இந்த விவகாரம் தொடர்பார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான பருத்தி வீரன் படத்தில் தனக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறினார். மேலும், அமீர் பொய் கணக்கு கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் ஒரு திருடன் மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

கடும் கண்டனம்: தயாரிப்பாளர் ஞானவேல் பேசியதற்கு திரைத்துத்துறையை சேர்ந்த சிலரும், அமீரின் நெருங்கிய நண்பர்களான சசிக்குமார், சமுத்திரக்கனி, சினேகன், கரு பழனியப்பன்,பாரதி ராஜா என பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

போலியான வருத்தம்: இந்த பிரச்சனை பெரிதானதை அடுத்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுருந்தார். ஆனாலும், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது என்றும், அதற்காக உண்மையை பலி கொடுக்க முடியாது என்றும் சசிகுமார் கூறியிருந்தார். அதே போல, சமுத்திர கனி, இந்த சீனெல்லாம் இங்க செல்லாது வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை, பொது இடத்தில் எப்படி அமீரை அவமதித்தாரோ அதே போல பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

நன்றி கெட்ட துரோகி: இப்படி இருதரப்பில் இருந்தும் பிரச்சனை புகைந்து கொண்டு இருக்கும் நிலையில், அமீர் மற்றும் அவருக்கு ஆதரவாக இருப்போருக்கும் எதிராக சூர்யா ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், நன்றி கெட்ட துரோகி அமீரையும், அவரது அல்லக்கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். சூர்யாவை சிங்கம் என்றும் அமீரை ஆதரிப்பவர்கள் ஓநாய்கள் என்றும் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X