பருத்திவீரன் பட நடிகை மரணம்.. வெள்ளந்தி சிரிப்பு கண் முன்னே நிற்பதாக கார்த்தி இரங்கல்!
சென்னை: பருத்திவீரன் படத்தில் அப்பத்தாவாக நடித்திருந்த பஞ்சவர்ணம் உடல்நலக் குறைவால் காலமானார்.
அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகை பிரியா மணிக்கும் இந்தப் படத்திற்கு பிறகுதான் ஒரு பிரேக் கிடைத்தது.

தேசிய விருது
இந்தப் படத்திற்காக பிரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது பருத்திவீரன் திரைப்படம்.

யுவன் சங்கர் ராஜா இசை
இந்தப் படத்தில் பொன்வண்ணன், சரவணன் கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கார்த்தியின் அப்பத்தா
இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்திருந்தவர் பஞ்சவர்ணம்.

கார்த்தி இரங்கல்
அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பஞ்சவர்ணம், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெள்ளந்தி சிரிப்பு
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











