Paruthiveeran: சிவகுமார், கார்த்திக்கு நடுவே அமீர்.. பின்னாடி ஞானவேல் ராஜா எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த பஞ்சாயத்து இத்தனை ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் முடியாமல் வெடித்து வரும் சூழலில் பருத்திவீரன் படத்திற்கு பூஜை போடப்பட்டபோது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் சந்தோஷமாக இருந்த தருணம் இதுதான் எனக் கூறுகின்றனர்.

Paruthiveeran movie pooja photo trending in social media

பருத்திவீரன் ரிலீஸ் ஆகும் போதே பெரிய பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில், அந்த படம் பல விருதுகளை பெற்று கார்த்திக்கு அங்கீகாரம் அளித்தும் இன்னமும் அமீர் மீது நடிகர் கார்த்திக்கு கோபம் கொஞ்சமும் குறையவில்லை என்கின்றனர்.

அமீர் ஏமாற்றினாரா?: பருத்திவீரன் படத்தை சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் அதிகரித்து விட்டார் என்றும் தவறான கணக்கு வழக்குகளை காட்டி அமீர் ஏமாற்றியதாக ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுக்கு பாரதிராஜா முதல் பல சினிமா பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அமைதி காக்கும் சிவகுமார் குடும்பம்: அமீர் குறித்து ஞானவேல் ராஜா முன் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு பாரதிராஜா, சமுத்திரகனி, சசிகுமார், கரு. பழனியப்பன், சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் அமீருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஞானவேல் ராஜா சொல்வது சரியென்றோ, தவறு என்றோ கூறாமல் சிவகுமாரின் குடும்பம் அமைதி காத்து வருவது ஏன்? என்கிற கேள்வியையும் பலர் எழுப்பி இந்த பிரச்சனை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Paruthiveeran movie pooja photo trending in social media

பருத்திவீரன் பூஜை: இந்நிலையில், ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பருத்திவீரன் படத்திற்கு பூஜை போட்ட போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தி நடுவே இயக்குநர் அமீர் அழகாக அமர்ந்திருக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆள் அடையாளமே தெரியாமல் தனது இளம் பருவத்தில் செம ஸ்லிம்மாக பின்னாடி நிற்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். எப்படி சந்தோஷமாக அந்த படம் ஆரம்பித்தது என பாருங்கள், இரு தரப்பும் சுமூகமாக பேசி இந்த பிரச்சனையை தீர்த்து விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X