பருத்திவீரன் சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு… மனைவி பரபரப்பு புகார்!

சென்னை : பருத்திவீரன் சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் நடிகர் சரவணனும் கமிட் ஆகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

1991ல் வெளியான வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு, சந்தோஷம், நந்தா என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Paruthiveeran saravanan wife suriya sri complaint about her husband

பருத்தி வீரன் சரவணன் : அதன் பின் சரவணனுக்கு பட குறைந்துபோகவே படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து, அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படம் சரவணனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அடைந்தது.

வெளியேற்றப்பட்டார் : பருத்திவீரன் படத்திற்கு பிறகு, விஜய் டிவி தொலைக்காட்சியில் கலந்து கொண்ட இவர் பாதிலேயே வெளியேறினார். அந்த நிகழ்ச்சியில், தான் இளம் வயதில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் போவேன் என்று பேசிய இருந்தார். இவரின் இந்த பேச்சு சர்ச்சை ஆனதை அடுத்து, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். தற்போது கணிசமான படங்களில் நடித்து வரும் சரவணன், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Paruthiveeran saravanan wife suriya sri complaint about her husband

வேறொரு பெண்ணுடன் தொடர்பு : இந்நிலையில், சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ, தனது கணவர் சரவணன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் சேர்ந்து வந்து வருகிறார் என்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனுவை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டில் இருந்து தன்னையே சரவணன் வெளியேற சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார். என்னை காதலித்து தான் சரவணன் திருமணம் செய்து கொண்டார் என்றும், எனக்கும்அவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை.

உயிருக்கு ஆபத்து : பருத்திவீரன் படத்துக்கு முன்பு வரை நான் தான் சம்பாதித்து குடும்பமே நடந்தது, அப்போது முகலிவாத்தில் உள்ள நான் சம்பாதித்து கணவர் என்பதால், அவர் பெயரில் வீடு வாங்கினேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தப்பு. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சரவணன் தான் காரணம் என சூர்யா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X