"ஊரோரம் புளியமரம்“ பாடகி லட்சுமி அம்மாள் உயிரிழந்தார்.. அந்த கணீர் குரலை இனி கேட்கவே முடியாதே!
சென்னை: பருத்திவீரன் படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயத 75. லட்சுமி அம்மாள் மறைவு அவரின் ரசிகர்கள், கிராமிய கலைஞர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
2007-ம் ஆண்டு, இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடி சினிமாவிலும், நாட்டுப்புறக் கலைஞர்கள் மத்தியிலும் புகழ்பெற்றார். நாட்டுப்புறப் பாடல்கள் மற்ற பாடல்களை பாடுவதை விட கடினம். இதற்கு நல்ல குரல் வளம் மட்டும் போதாது, நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி உரத்த குரலில், அடிவயிற்றில் இருந்து கனீர் குரலில் பாட வேண்டும். இதற்கு லட்சுமி அம்மாளின் உடல் ஒத்துழைக்கவில்லை. 2016-ம் ஆண்டு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், லட்சுமியம்மாளால் பாட முடியாமல் போனது.

கிராமிய பாடகி லட்சுமி அம்மாள்: பரவை முனியம்மாள் சினிமாவிற்கு வருவாதற்கு முன், இவரும் சேர்ந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பட்டித்தொட்டிகளுக்கெல்லாம் சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடி வந்துள்ளனர். பரவை முனியம்மாள் தூள் படம் மூலம் சினிமாவில் உச்சம் தொட்டப்பிறகு லட்சுமியம்மாள், தனியாக நாட்டுப்புற பாடல் கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தார். பின் பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் பாட ஆரம்பித்தார். ஆனால், லட்சுமியால் 6 படங்களில் மட்டுமே பாட முடிந்தது, அதற்கு மேல் உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக பணத்தை செலவு செய்து வறுமையில் வாடி வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயத 75. லட்சுமி அம்மாள் மறைவு அவரின் ரசிகர்கள், கிராமிய கலைஞர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications