யாரும் இல்லாத அறையில் பாரு, கம்ருதீன்.. சத்தம் கேட்டு அலறியடித்து ஓட்டம்.. எல்லை மீறி அட்டகாசம்!

சென்னை: 68 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போதுதான் சூடு பிடித்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிபி வழக்காடு மன்றத்தில் பலரும் பல வழக்குகளை தொடுத்து அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விதவிதமாக வரும் வழக்குகளால், நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

இதில், முதலாவதாக வழக்காக வினோத், ஆதிரை மீது புகார் கொடுத்திருந்தார். அதாவது வாட்டர் மிலன் திவாகர் வெளியே போனதற்கு வினோத் தான் காரணம் என தொடர்ந்து ஆதிரை கூறி வந்ததால், ஆதிரை மீது வினோத் வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கில் வினோத்தின் வழக்கறிஞராக விக்ரமும், ஆதிரையின் வழக்கறிஞராக அரோராவும் இருந்தனர். இந்த வழக்கில், திவாகர் வெளியேறியதற்கு வினோத் காரணம் இல்லை என்று, அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

Bigg Boss Parvathi Kamrudeen
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பாரு மற்றும் கம்ருதீன் இருவருமே மைக்கை மறைத்துக்கொண்டு ரகசியமாக பல விஷயங்களை பேசி வருகிறார்கள். தொடர்ந்து இப்படியே நடந்து கொண்டு வந்ததால் கடுப்பான பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பால், முட்டை, காபி தூள், டீ தூள் என ஒட்டுமொத்தமான பொருட்களை திரும்ப பெற்றுக் கொண்டு அனைவருக்கும் தண்டனை கொடுத்துள்ளார். பாரு மற்றும் கம்ருதீன் செய்த தவறுக்காக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுக்க வேண்டும் என பாரு மற்றும் கம்ருதீன் மீது ரம்யா, சுபிக்ஷா, சாண்ட்ரா, திவ்யா அனைவரும் வழக்கு போட்டு விவாதம் நடந்து வருகிறது.

Bigg Boss Parvathi Kamrudeen
Photo Credit:

தனி அறையில் இருவர்: இந்த வழக்கு விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வந்த நேரத்தில், யாருமே இல்லாத அந்த வழக்காடு மன்றத்திற்குள் யாராவது பார்க்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு, பாரு மற்றும் கம்ருதீன் இருவரும் உள்ளே சென்று நீண்ட நேரமாக வெளியிலேயே வராமல் இருந்துள்ளனர். நீண்ட நேரமாக இவர்கள் வெளியே வராததால், கடுப்பான பிக் பாஸ், பாரு, கம்ருதீன் என்று சொன்னதும் இருவரும் அலறி அடித்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே ஒடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பலரும் பாரு மற்றும் கம்ருதீனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருமே அடிக்கடி விதிமுறைகளை மீறுகிறார்கள். இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கருத்துக்களை இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X