கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன் போருக்கு செல்வது போல உணர்கிறேன்... நடிகை பார்வதி நாயர்!

சென்னை : என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

ஆலம்பனா,83, ரூபம் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பார்வதி நாயர் போருக்கு செல்வது போல உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நெகட்டிவ் ரோலில்

நெகட்டிவ் ரோலில்

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழுக்கு என்னை அறிந்தால் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதரு அதரு பாடலில் இறங்கிய செம குத்தாட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து இருந்தார். உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த பார்வதி நிமிர் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசர வைத்தார்.

ரூபம்

ரூபம்

இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை பல நடிகைகளும் விரும்புவதால் அதே பாணியில் பார்வதி நாயரும் ஆலம்பனா மற்றும் ரூபம் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆலம்பனா வில் அலாவுதீனாக வைபவ், பூதமாக முனீஸ்காந்த் நடித்து வருகிறார்கள் .

விழிப்புணர்வை ஏற்படுத்தும்

விழிப்புணர்வை ஏற்படுத்தும்

பார்க்கும் அனைவரும் கிறங்கிப் போகும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தொடர்ந்து வைரலாகி வரும் பார்வதி நாயர் தமிழ்,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்பொழுது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி எனும் சூப்பர் ஹீரோ

தடுப்பூசி எனும் சூப்பர் ஹீரோ

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்ல தடுப்பூசி போடும் வேலையும் நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இப்போது பார்வதி நாயரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதன் மூலம் நான் ஒரு வொண்டர் வுமனாக உணர்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் எதிர்த்து போராட வேண்டும் நமது இயல்பு வாழ்க்கை கடுமையாக மாறிவிட்டது. இந்த தடுப்பூசி எனும் சூப்பர் ஹீரோ கொரோனாவுடன் சண்டையிட்டு வெல்லும் என நம்புகிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X