குரங்கு என்ற திட்டிய இயக்குனர்: தெறிச்சு ஓடிடு என்று பதிலடி கொடுத்த நடிகை
திருவனந்தபுரம்: நடிகை பார்வதியை குரங்கு என்று விமர்சித்த இயக்குனரை ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.
கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை பார்வதி மலையாள திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று பேசினார்.
பெரிய நடிகராக இருக்கும் மம்மூட்டியே இந்த வயதில் பெண்களை அவமதிக்கும் வசனங்களை பேசுவது சரியா என்று கேட்டார். இதையடுத்து மம்மூட்டி ரசிகர்கள் பார்வதியை சமூக வலைதளங்களில் திட்டினர்.
ஃபேஸ்புக்
மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் குரங்கு குரங்கு என்று மட்டும் கூறி பார்வதியை விமர்சித்துள்ளார். அவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும் பார்வதியை பற்றி தான் பேசுகிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது.

விமர்சனம்
மம்மூட்டி விவகாரம் போன்று இதிலும் ரசிகர்கள் பார்வதியை திட்டுவார்கள் என்று எதிர்பார்த்த ஜூடுக்கு ஏமாற்றமே மிச்சம். ரசிகர்கள் பார்வதிக்கு பதில் ஜூடை திட்டத் துவங்கிவிட்டனர்.

இயக்கம்
ஜூட், 2 படங்கள் எடுத்த மற்றொரு குரங்கை எனக்கு தெரியும். தற்போது அந்த குரங்கு திரையுலகின் பெரிய ஆட்களிடம் நல்ல பெயர் வாங்க சில விஷயங்களை செய்கிறது என்று ரசிகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ட்வீட்
சர்க்கஸ் முதலிமார்களுக்கு என்று கூறி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பார்வதி. ஓடிப் போயிடு என்று அந்த ட்வீட் மூலம் சொல்லியுள்ளார் பார்வதி.


Click it and Unblock the Notifications











