கார் விபத்தில் சிக்கிய தனுஷ் ஹீரோயின்
கொச்சி: தேசிய விருது வாங்கிய நடிகை பார்வதி கார் விபத்தில் சிக்கினார்.
மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பார்வதி. தேசிய விருது பெற்ற பார்வதி வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்றார்.

அவர் சென்ற இன்னோவா கார் ஆலப்புழா அருகே உள்ள கொம்மாடி பகுதியில் சென்றபோது அவர் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து பார்வதி வேறு காரில் கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்காததால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
முன்னதாக குடியரசுத் தலைவர் கோவிந்த் விருதை வழங்காததால் டெல்லி வரை சென்ற பார்வதி தேசிய விருது விழாவை புறக்கணித்துவிட்டு கேரளா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications