தவறான செய்தியை பரப்பாதீங்க...ஊடகங்களை எச்சரித்த பார்வதி நாயர்!
சென்னை : வீட்டில் நடந்த திருட்டு சம்பவ விவகாரம் குறித்து தவறான செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என நடிகை பார்வதி நாயர் எச்சரித்துள்ளார்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி.

பார்வதி நாயகர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து ரூ9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள், ரூ1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ2 லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவை திருட்டு போய் விட்டதாகவும், வீட்டில் பணிபுரிந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ்தான் இதை திருடிவிட்டார் என்று அக்டோபர் 20ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பரபரப்பு புகார்
நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்ததாகவும், அதில் பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறியிருந்தார்.

தவறான செய்தி
அதுமட்டுமில்லாமல் நடிகை பார்வதி நாயர் மீது அடுக்கடுக்கான பல புகார்களை சுபாஷ் கூறியதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. தன்னை பற்றி ஊடகங்களில் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பரவிய செய்தியால் அதிருப்தி அடைந்த நடிகை பார்வதி நாயகர் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சரித்த பார்வதி நாயர்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் நடந்த திருட்டு விவகாரம் குறித்து சில ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளன. என் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











