Parvathy Nair: அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. பணம் கேட்டு மிரட்டினார்.. பார்வதி நாயர் வேதனை!

சென்னை: நடிகை பார்வதி நாயர், தன்னை அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான புகாரால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்த, சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரில், நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் மது அருந்தியதை தான் பார்த்துவிட்டதால், தன்னை நண்பர்களுடன் சேர்ந்து அடித்ததாகவும், தன் மீது எச்சிலை உமிழ்ந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

parvathy nair subhash statement

நடிகை பார்வதி நாயர்: இதையடுத்து பார்வதி நாயர் வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டு என் வீட்டில் நடந்த திருட்டைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய துன்புறுத்தலை அனுபவித்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான போதிலும், ஊடகங்களில் வெளியாக அவதூறு செய்து நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், சமூகத்தில் பொறுப்புள்ள நபர்கள் என் மீது பரபரப்பான பொய்யான கதைகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

மிரட்டினார்: 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், என் வீட்டில் இருந்து சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது, இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். இதில், ஒருவர் தான் சுபாஷ், இவர் தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக இருந்தார், அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில், உதவியாளராக என் வீட்டில் பணிபுரிந்தார். அவர் எனது சில போட்டோக்களை வைத்து என்னை மிரட்டினார். ஆனால் நான், மிரட்டலுக்கு பயப்படாமல் எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.

பிரைவெட் போட்டோக்கள்: இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் கழித்து, சுபாஷ் எனக்கு எதிராக ஒரு ஜோடிக்கப்பட்ட புகாரைப் பதிவுசெய்து, ஊடகங்களை என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்பினார். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார். மேலும், என் பிரைவேட் போட்டோக்களை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். இதை எதிர்த்து நான் அவர் மீது மற்றொரு புகார் அளித்தேன் இந்த வழக்கில் சுபாஷ் கைது செய்யப்பட்டார்.

பொய்யான செய்திகள்: சுபாஷும் அவரது கூட்டாளிகளும் என்னை ஒரு வருடமாக தொடர்ந்து இடைவிடாது துன்புறுத்தி என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார்கள். மேலும், ஒரு பெரிய நடிகரின் படத்தில் நான் கமிட்டானதும் எனக்கு துன்புறுத்தல் அதிகரித்தது. இதையடுத்தே, என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறினார். தற்போது, சுபாஷ் பல யூடியூப் சேனல்களில், எனது நற்பெயரை கெடுத்து, என்னை வற்புறுத்துவதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார். மேலும், அவர், தன்னைப் பெண்கள் மீது அக்கறை கொண்டவராக சித்தரித்துக் பொதுமக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.

இவரின் இத்தகைய செயலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இந்த நேரத்தில், வாழ்க்கை, பாதுகாப்பு, நற்பெயர், அவதூறாகப் பேச்சுக்களால் பெரும் ஆபத்தில் உள்ளேன். இச்சூழ்நிலையில், என் பக்கம் இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றி. நீதி வெல்லும் என்று நம்புகிறேன் என பார்வதி நாயர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X