பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை : அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார் நடிகை பார்வதி நாயர். அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி ஹிந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 83 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த பார்வதி நாயர் இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஹாரர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்க அதன் டைட்டில் மற்றும் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரட்டியுள்ளது.

கவர்ச்சி பொங்க வெளியிட்டு
சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு பார்வதி நாயரை மிக நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு விதவிதமான புகைப்படங்களை கவர்ச்சி பொங்க தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் இப்பொழுது தமிழில் உருவாக இருக்கும் ஹாரர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடக்க உள்ளார்.

அதில் வெற்றியும் கண்டு
நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட ஹீரோயின்களைத் தொடர்ந்து பல நடிகைகளும் இப்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டு வரும் நிலையில் இப்பொழுது அந்த பட்டியலில் நடிகை பார்வதி நாயரும் இணைந்துள்ளார்.

கால் தடத்தை பதித்துள்ளார்
என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்வதி நாயர் ஏற்கனவே மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நிலையில் இப்பொழுது தென் இந்தியாவையும் தாண்டி ஹிந்தி திரைப்படத் துறையிலும் கால் தடத்தை பதித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் பாத்திரத்தில்
கபில் தேவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வரும் 83ல் முக்கிய வேடத்தில் பார்வதி நாயர் நடித்து வர, அதில் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரம்மிக்க வைத்து
இவ்வாறு தனது அடுத்தடுத்த திரைப் படங்களின் மூலம் அனைவரையும் பிரம்மிக்க வைத்து வரும் பார்வதி நாயர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமொன்றில் நடித்து வருவதாக ஓரிரு நாட்களுக்கு முன் செய்தி வெளியான நிலையில் இன்று அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டைட்டில் "ரூபம்"
அந்த போஸ்டரில் பார்வதி நாயர் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்க, பார்வதி நாயரைப் போலவே மற்றொரு உருவம் கண்ணாடியில் இருந்து கையை வெளியே நீட்டிக் கொண்டிருக்க கண்ணாடிக்குள் ஒரு ஓரம் பேயின் உருவம் ஒன்றும் தெரிகிறது. இவ்வாறு பார்ப்போரை பயமுறுத்தும் விதமாக வெளியாகியிருக்கும் இதன் டைட்டில் "ரூபம்" என வைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசை
அறிமுக இயக்குனர் தாமரைச்செல்வன் இந்த திரைப்படத்தை இயக்க பார்வதி நாயர் முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளார். பார்வதி நாயரின் முந்தய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நிலையில், பயமுறுத்தும் திகில் கதைக் களத்தை கொண்டு உருவாக இருக்கும் இந்த ரூபம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











