100 வருஷத்துக்கு பிறகு அவ என்னை கண்டுபிடிச்சிட்டா.. தங்கலான் நாயகி பார்வதியின் BTS புகைப்படம்!

சென்னை: பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து அசத்திய மலையாள நடிகை பார்வதி சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.

கடந்த 2006ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அவுட் ஆஃப் சிலபஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி.

மரியான் படத்தில் தனுஷ் உடன் அழகு கொஞ்ச நடித்த பார்வதியை ரசிகர்கள் "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன" என கொஞ்சி வந்த நிலையில், தங்கலான் படத்தில் தனது அடுத்த அதிரடியான நடிப்பை காட்ட காத்திருக்கிறார்.

மலையாள நடிகை

மலையாள நடிகை

அவுட் ஆஃப் சிலபஸ், நோட்புக், ஃபிளாஷ், பெங்களூரு டேஸ், என்னு நின்டே மொய்தீன், சார்லி, டேக் ஆஃப், உயரே, புழு, வொண்டர் உமன் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் பார்வதி. தனது தனித்துவமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். பெங்களூரு டேஸ் மற்றும் சார்லி படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார்.

மரியான்

மரியான்

இயக்குநர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்வதி, அடுத்ததாக தனுஷ் நடிப்பில் பாரத் பாலா இயக்கத்தில் வெளியான மரியான் படத்தில் நடித்தார். தனுஷ் உடன் செம கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆன நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படத்தில் இடம் பெற்ற நெஞ்சே எழு, இன்னும் கொஞ்சம் நேரம், சோனாப்பரியா என அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. பார்வதியின் அழகையும் கவர்ச்சியையும் மரியான் படத்தின் ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் ஃபிரேம் பை ஃபிரேம் செதுக்கி இருப்பார்.

மம்மூட்டி பட சர்ச்சை

மம்மூட்டி பட சர்ச்சை

மம்மூட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்தில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றது ஏன் என நடிகை பார்வதி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தன. மம்மூட்டி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால், மம்மூட்டி நடிகை பார்வதியிடம் இதை பற்றி பேசி விட்டதாகவும், தான் யாரையும் அவரை பற்றி அவதூறாக பேசச் சொல்லவில்லை என்றும் பேசி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான புழு படத்தில் பார்வதி நடித்ததும் தான் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. துல்கர் சல்மான் உடன் பார்வதி இணைந்து நடித்த சார்லி, பெங்களூர் டேஸ் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தங்கலான் படத்தில்

தங்கலான் படத்தில்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் நடித்து வருகின்றனர். தங்கலான் டைட்டில் அறிமுக வீடியோவிலேயே அப்போகலிப்டோ படத்தில் வரும் ஆதிவாசி பெண்ணாக பயங்கரமாக இருந்தார் பார்வதி. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் BTS புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நூறு வருஷம் கழித்து

நூறு வருஷம் கழித்து

தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போட்டுக் கொண்டு இருக்கும் போது ஸ்லீவ்லெஸ் ஆடையில் அப்படியே பழங்குடியின பெண்ணாக காட்சியளிக்கும் பார்வதி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து (Hundreds of years later.. She found me. She inhabits me. She is.. me. and I.. her..) 100 ஆண்டுகள் கழித்து அவள் உன்னை கண்டுபிடித்து விட்டாள், அவள் வேறு யாரும் இல்லை, நீயே தான் என பீரியட் படத்தில் நடிக்கும் எஃபெக்ட் உடன் கேப்ஷன் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X