நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல!

By

கொச்சி: படம் இயக்குவதற்காக நடிப்புக்கு சில காலம் விடுமுறை விட இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

ACTRESS PUJITHA | சூர்யா கூட நடிக்க ஆசை | V-CONNECT | FILMIBEAT TAMIL

தமிழில், பூ படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை பார்வதி. தனது முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட பார்வதிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார்.

திராவக வீச்சு

திராவக வீச்சு

தெலுங்கு, கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பார்வதி. மலையாளத்தில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் வரும் அவர், உயரே என்ற படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதற்காகத் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படம் பேசப்பட்டது.

அர்ஜூன் ரெட்டி

அர்ஜூன் ரெட்டி

அடுத்து அவர் நடித்த வைரஸ் படம் ஹிட்டானது. ராச்சியம்மா என்ற அந்தாலஜி படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அவரது தோற்றம் நம்ப முடியாததாக இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசும் நடிகை பார்வதி கடந்த சில மாதங்களுக்கு முன், மும்பையில் இளம் நடிகர்கள் சந்திப்பில், விஜய தேவரகொண்டா முன், அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை பயங்கரமாக விளாசித் தள்ளியிருந்தார்.

இரண்டு ஸ்கிரிப்ட்

இரண்டு ஸ்கிரிப்ட்

இந்நிலையில் இந்த லாக்டவுனில், படம் இயக்குவதற்காக இரண்டு ஸ்கிரிப்ட் உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார், பார்வதி. இதற்காக தான் நடிக்க வேண்டிய மூன்று படங்களில் இருந்து விலகி இருக்கிறாராம். அவர் கூறும்போது, நான் படம் இயக்குவதற்காக இரண்டு ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். ஒரு படத்தை என் சினிமா துறை நண்பருடன் இணைந்து உருவாக்குகிறேன்.

அரசியல் பின்னணி

அரசியல் பின்னணி

அதற்கான முன் தயாரிப்பு திட்டங்களைத் தொடங்கிவிட்டேன். இதற்காக நடிப்புக்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்க இருக்கிறேன். உருவாக்கியுள்ள இரண்டு கதைகளில் ஒன்று அரசியல் பின்னணி கதை, மற்றொன்று சைக்காலஜிக்கல் த்ரில்லர். இதற்காக சில ஆய்வுகள் தேவைப்பட்டது. அதற்கான வேலைகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறேன். லாக்டவுன் முடிந்ததும் அதற்கான அறிவிப்புகள் வரலாம்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X