சீயான் 61 படத்தில் ராஷ்மிகாவும் இல்லை மாளவிகா மோகனும் கிடையாது… விக்ரமுடன் இணையும் பார்வதி, பசுபதி?

சென்னை: கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை முடித்துவிட்டு இப்போது 'சீயான் 61' படத்தில் கமிட் ஆகியுள்ளார் விக்ரம்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடப்பாவில் தொடங்கியது.

விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது மாளவிகா மோகனன் நடிக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சீயான் 61

சீயான் 61

விக்ரம் நடிப்பில் மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், இதுவரை 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் விக்ரம். இந்நிலையில், தற்போது பா ரஞ்சித்தின் சீயான் 61 படத்தில் பிஸியாகிவிட்டார் விக்ரம். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. தற்போது சீயான் 61 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் ஜோடி

விக்ரம் ஜோடி

சீயான் 61 திரைப்படம் கோலார் தங்க வயலின் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதானால், கேஜிஎஃப் திரைப்படம் போன்று ரொம்பவே பிரம்மாண்டமாக ஆக்சன் கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அவரது கால்ஷீட் பிரச்சினையால் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என இருதினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்நிலையில், விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன் இருவரும் நடிக்கவில்லை என்றும், மலையாள நடிகை பார்வதி நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மீண்டும் கோலிவுட்டில்

மீண்டும் கோலிவுட்டில்

மலையாளத்தில் டேக் ஆஃப், என்னு நிண்டே மொய்தீன், பேங்ளூர் டேய்ஸ், புளு போன்ற பல படங்களில் நடித்துள்ள பார்வதி, தமிழில் மரியான், உத்தம வில்லன், சமீபத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் சீயான் 61 படம் மூலம், மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு அடிக்க ரெடியாகிவிட்டார் பார்வதி. சீயான் 61 படத்தில் விக்ரம் ஜோடியாக பார்வதி நடிப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரங்கன் வாத்தியார்

ரங்கன் வாத்தியார்

இந்நிலையில், சீயான் 61 படத்தில் விக்ரமுடன் பசுபதியும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் இணைந்து தூள், மஜா ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அதேபோல், ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து மாஸ் காட்டியிருந்தார். தமிழ்த் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான பசுபதியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது, சீயான் 61 மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விக்ரமுடன் பார்வதி, பசுபதி தவிர இன்னும் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவலை படக்குழு விரைவில் அறிவிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X