அப்படியொரு கவர்ச்சி புகைப்படம்.. மொஹரம் திருநாளுக்கு வாழ்த்து சொல்லி மூக்குடைப்பட்ட பிரபல நடிகை!
சென்னை: மொஹரம் திருநாளுக்கு கவர்ச்சி போட்டோவுடன் வாழ்த்து சொன்ன நடிகை பார்வதி நாயரை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
அஜித்தின் என்னை அறிந்தால், உதயநிதி ஸ்டாலினின் நிமிர், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி நாயர் மொஹரம் வாழ்த்து சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அப்படி பார்வதி நாயர் போட்ட போஸ்ட்டில் என்ன பிரச்சனை என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

படுகவர்ச்சி பார்வதி நாயர்
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி படுகவர்ச்சியான போட்டோக்களையும் போட்டு இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய நண்பர்கள் ஹாலிடேவில் இருக்கிறார்களே அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம் என அவர் பதிவிட்டது அவருக்கு பிரச்சனையாக மாறி விட்டது.

மொஹரம் வாழ்த்து சொன்ன பார்வதி
"May peace, happiness, and prosperity surround you always. Happy #Muharram" என ஸ்மைலி எமோஜி போட்டு படு கவர்ச்சியான தனது புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்து முஸ்லீம் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறினார் பார்வதி நாயர். ரசிகர்களிடம் இருந்து பதிலுக்கு வாழ்த்து கிடைக்கும் என காத்திருந்த பார்வதிக்கு மூக்குடைந்தது தான் மிச்சம்.

ஜிப்பை கழட்டி
பொதுவாக இதுபோன்ற இஸ்லாமிய திருநாளுக்கு வாழ்த்து சொல்லவே நடிகைகள் தனியாக பிரத்யேகமாக இஸ்லாமிய பெண் போலவே போட்டோஷூட் எல்லாம் நடத்தி வாழ்த்து சொல்வார்கள். ஆனால், பார்வதி நாயர் இன்றைக்கும் கவர்ச்சியாக தனது மேலாடையின் ஜிப்பை கழட்டி விட்டபடி படு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

ஜிப்பை கழட்டி
பொதுவாக இதுபோன்ற இஸ்லாமிய திருநாளுக்கு வாழ்த்து சொல்லவே நடிகைகள் தனியாக பிரத்யேகமாக இஸ்லாமிய பெண் போலவே போட்டோஷூட் எல்லாம் நடத்தி வாழ்த்து சொல்வார்கள். ஆனால், பார்வதி நாயர் இன்றைக்கும் கவர்ச்சியாக தனது மேலாடையின் ஜிப்பை கழட்டி விட்டபடி படு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

நான்சென்ஸ் இது துக்க தினம்
நான்சென்ஸ் இது துக்க தினம், இதை போய் யாராவது கொண்டாடுவாடுங்களா என பார்வதி நாயரை பொசுக்கென திட்டி உள்ளார் ஒரு நெட்டிசன். மேலும், மொஹரம் பண்டிகைக்கு யாரும் வாழ்த்த மாட்டார்கள் என சில இஸ்லாமியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். கவர்ச்சியாக போஸ் போட்டு வாழ்த்தலாமா பாரு என்றும் கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர்.

மொஹரம் வரலாறு
கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர். ரம்ஜானை போன்றே மொஹரமும் இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். அதிலும், இது முதல் மாதம் என்பதால், சிலர் இதனை கொண்டாடவும் செய்கின்றனர். சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் இதனை வீரத் திருநாளாக பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











