வயதில் மூத்த நடிகையை காதலிக்கும்...பசங்க பட நடிகர் கிஷோர்..விரைவில் திருமணம்!

சென்னை : பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் கிஷோர், தன்னை விட வயதில் மூத்த நடிகையை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காதல் என்பது ஓர் மந்திரச் சொல். இனம், மொழி, மதம், ஜாதி, வயது என அத்தனையும் கடந்து மனதிற்குள் வந்து பேயாட்டம் ஆடிவிட்டு போகும்.

காதல் ஒருவனை சாதனையாளராகவும் மாற்றும், பைத்தியக்காரனாகவும் மாற்றும், அது தான் காதல். காதல் இல்லையேல் மனித வாழ்வே இல்லை எனலாம். அப்படி ஒரு புது காதல் ஜோடி தைரியமாக தங்கள் காதலை அறிவித்துள்ளனர்.

பசங்க பட நடிகர் கிஷோர்

பசங்க பட நடிகர் கிஷோர்

2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பசங்க. இப்படத்தில் விமல்,வேகா, கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் நடித்திருந்தனர். குழந்தைகளை மையக்கருவாக வைத்து உருவான இப்படம் கணிசமான வசூலைப் பெற்றுத் தந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.

விருதை வென்றார்

விருதை வென்றார்

பசங்க படத்தில் அன்புக்கரன் என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருந்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை கொடுத்து கௌரவித்தது. பசங்க படத்திற்கு பின் கிஷோர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்திருந்த கோலி சோடா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற தமிழ் படங்களிலும், துரோகி,புள்ளி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்திற்காக காத்திருக்கிறேன்

திருமணத்திற்காக காத்திருக்கிறேன்

இந்நிலையில் நடிகர் கிஷோர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ப்ரீத்தியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோம்மா.உன்னை திருமணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நாங்கள் எங்கள் பிறந்த நாளை கணவன் மனைவியாக கொண்டாடுவோம். லவ் யூ அசோம்மா என பதிவிட்டு தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகை ப்ரீத்தி குமார்

நடிகை ப்ரீத்தி குமார்

நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமாகியவர். அதன் பின் லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். நடிகை ப்ரீத்தி குமார், கிஷோரைவிட நான்கு ஆண்டு மூத்தவர் ஆவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X