பசங்க’ பட நாயகர்கள் நடிக்கும் வஜ்ரம்... கதைக்களம் ‘கல்வி’

சென்னை: பசங்க, கோலிசோடா போன்ற படங்களில் நடித்த நடிகர்கள் நடிக்க வஜ்ரம் என்ற பெயரில் புதிய படம் ஒன்று கல்வியின் விழிப்புணர்வை வலியுறுத்தி தயாராகி வருகிறது.

இப்படத்தை ரமேஷ்செல்வம் இயக்க ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கிறது. ரமேஷ் செல்வம் ஏற்கனவே விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, அருண் விஜய் நடித்த ஜனனம் ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் தொடர்பாக ரமேஷ் செல்வம் கூறுகையில்,

கல்வி...

கல்வி...

இன்று உலகம் முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றித்தான். இன்று அங்கீகரிக்கப்பட்ட கொள்ளேயே கல்விதான் இதை தான் இந்த படத்தில் சொல்கிறோம்.

இன்றைய தலைமுறையினரின் பிரச்சினை...

இன்றைய தலைமுறையினரின் பிரச்சினை...

கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம் தான் இன்றைய தலைமுறையினரின் பிரச்னை. இந்த படத்தில் இதை கமர்ஷியல் கலந்து அதிரடி படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

சென்னை, மூணாறு, சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இசை...

இசை...

இப்படத்திற்கு ஒளிப்பதிவு குமரேசன். பைசல் இசை அமைக்க சினேகன் பாடல்களை எழுதுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X