‘காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம்’... வஜ்ரம் குழு நடத்திய விழிப்புணர்வு மராத்தான்!

சென்னை: பசங்க, கோலிசோடா ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘வஜ்ரம்'. பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார்.

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப் பட்டுள்ளது. எனவே, அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த மராத்தான் போட்டியை வஜ்ரம் படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்...

விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்...

இந்த மராத்தான் போட்டி விழாவில் கலைபுலி எஸ்.தாணு, தம்பிராமையா, கே.ராஜன், ஜெயபிரகாஷ், சித்ராலட்சுமணன், விசென்ட்அசோகன், மற்றும் வஜ்ரம் படத்தில் நடிக்கும் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி மற்றும் வஜ்ரம் பட இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் கல்வி...

அனைவருக்கும் கல்வி...

தனது வஜ்ரம் படம் குறித்து இயக்குநர் ரமேஷ்செல்வன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி, காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம், இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்" இந்த கருத்தை மையமாக வைத்து 'வஜ்ரம்'திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு மராத்தான்...

விழிப்புணர்வு மராத்தான்...

இந்த மராத்தான் போட்டி மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கல்வியின் அவசியமும், முக்கியத்துவமும் போய் சேரும் என்பது தான் படக்குழுவினரின் முக்கிய நோக்கமாம்.

அண்ணா சதுக்கத்திலிருந்து...

அண்ணா சதுக்கத்திலிருந்து...

இன்று காலை சுமார் 6.30 மணியளவில், சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை இந்த மராத்தான் போட்டி நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள்...

பள்ளி மாணவர்கள்...

இந்த மராத்தான் போட்டியில் சென்னையில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X