Pasanga Kishore : அவசர அவசரமாக கல்யாணம் பண்ண இதுதான் காரணம்.. பசங்க பட நடிகரின் மனைவி பேட்டி!

சென்னை : அவசர அவசரமாக திருமணம் நடந்தது குறித்து பசங்க பட நடிகரின் மனைவி ப்ரீத்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் கிஷோர், தன்னை விட வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாவே கிஷோரும் ப்ரீத்தி காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் கிஷோர் : 2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பசங்க. இப்படத்தில் விமல்,வேகா, கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் நடித்திருந்தனர். குழந்தைகளை மையக்கருவாக வைத்து உருவான இப்படம் வசூலைப் பெற்றுத் தந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.

பசங்க பட நடிகர் : பசங்க படத்தில் அன்புக்கரன் என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருந்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை கொடுத்து கௌரவித்தது. பசங்க படத்திற்கு பின் கிஷோர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்திருந்த கோலி சோடா என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற தமிழ் படங்களிலும், துரோகி,புள்ளி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

Pasanga Kishore and wife preethi opens up about marriage life

வயது வித்தியாசம் : இதையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலிப்பதாக அறிவித்த சில நாட்களிலேயே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பேட்டி அளித்துள்ளனர். இதில்,வயது வித்தியாசம் குறித்த கேள்விக்கு பேட்டி அளித்த ப்ரீத்தி, வயது வித்தியாசம் என்பது எங்களுக்கு பிரச்சனையாகவே தெரியவில்லை. எனக்கு அவரை பிடித்து இருக்கிறது அவருக்கு என்னை பிடித்து இருக்கும் போது வயது வித்தியாசம் ஒரு விஷயமா என்றார்.

அவசர திருமணம் : மேலும்,எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்ததால், பலரை எங்களால் அழைக்க முடியவில்லை. என் அப்பா நான்கு ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் ஆசையை நிறைவேற்ற தான் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து கொண்டாம். அப்பா மட்டும் நன்றாக இருந்திருந்தால், கண்டிப்பாக லேட்டாகத்தான் கல்யாணம் செய்திருப்போம் என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X