அதுக்குள்ள குட் நியூஸ் சொல்லிட்டாங்களே! கர்ப்பமாக இருக்கும் பசங்க கிஷோர்-ப்ரீத்தி.. குவியும் வாழ்த்து

சென்னை: பசங்க படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் கிஷோர். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பினைத் தொடங்கிய இவர், இப்போது கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். பசங்க, கோலி சோடா என இவரது ஆரம்பகால திரை வாழ்க்கை, அதில் அடுத்ததடுத்த வெற்றி என, மக்கள் மனதில் நல்ல அறிமுகத்தை பெற்றுவிட்டார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை ப்ரீத்தியைத் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியர் கர்ப்பமாக இருப்பதால், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிஷோர், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் இருந்தாலும், தனது படிப்புகளை முடித்துவிட்டு, முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றார். பசங்க படத்திற்குப் பின்னர் அதே குழந்தை நட்சத்திரங்கள் இணைந்து நடித்த படம், கோலி சோடா. இந்தப் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதனால் பசங்க மற்றும் கோலி சோடா நடிகர்கள் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

pasanga kishore kishore preethi kumar

கிஷோர்: தற்போது கோலி சோடா படத்தின் கதையை மையமாகக் கொண்டு, கோலி சோடா ரைசிங் என்ற வெப் சீரீஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்த வெப் சீரீஸ், வாரம் ஒரு எபிசோடாக ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் , கதை, கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை என இந்த வெப் சீரீஸின் அனைத்து துறைகளும் பாராட்டுகளைப் பெற்றது.

pasanga kishore kishore preethi kumar

வயது வித்தியாசம்: நடிகர் கிஷோர் இந்தப் வெப் சீரீஸில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார். கிஷோரைப் பொறுத்தவரையில், சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கு முதலில் பெற்றோர்கள் தயக்கம் காட்ட, அதன் பின்னர் இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஓ.கே. சொல்லிவிட்டனர். இவர்களின் திருமணத்தின் போது பரவலாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது கிஷோரை விட, ப்ரீத்திக்கு 4 வயது அதிகம், என்பதுதான். இவர்களது காதல் அதையடுத்து திருமண வாழ்க்கை என அனைத்தும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கும்போது, கூடுதல் மகிழ்ச்சியாக செம ஹேப்பியான செய்தியும் வந்துள்ளது.

pasanga kishore kishore preethi kumar

கர்ப்பம்: திருமணம் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது, தற்போது இவர்கள் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் தங்கள் குழந்தையை வரவேற்க மிகவும் ஆவலாக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்கள். இந்தத் தகவல் இணையத்தில் வேகமாக பரவ அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது. தற்போது கிஷோர் - ப்ரீத்தி தம்பதியர் வாழ்த்து மழையிலும், மகிழ்ச்சி மழையிலும் நனைந்தபடி உள்ளார்கள்.

pasanga kishore kishore preethi kumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X