Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!

சென்னை: பசி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் துரை உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ள துரை, தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.

கலைமாமணி விருது பெற்றுள்ள துரை, தான் இயக்கிய பசி படத்திற்காக இரு தேசிய விருதுகளை குவித்துள்ளார். கடந்த 1979ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை குவித்தது. மேலும் தமிழக அரசின் விருதுகளும் ஃபிலிம்பேர் விருதுகளும் இந்தப் படத்திற்கு குவிந்தன.

Pasi movie famous Director Durai passed away due to ill health

இயக்குநர் துரை: நடிகர் விஜயன், ஷோபா நடிப்பில் கடந்த 1979ம் ஆண்டில் வெளியான படம் பசி. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தமிழில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை என இரு தேசிய விருதுகளை குவித்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் துரை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்திய அளவில் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் துரை. தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டவர். பசி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

பசி பட இயக்குநர் காலமானார்: பசி படம் இவரது இயக்கத்திற்கு சாட்சியாக அமைந்தாலும் அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட துரையில் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில கவனம் பெற்றன. இருந்த போதிலும் பசி படம்தான் துரையின் சிறப்பான இயக்கத்திற்கு உதாரணமாக இன்றளவும் கூறப்படுகின்றன. இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளுடன் தமிழக அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளையும் குவித்தன. படத்தின் கதைக்களம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக துரை இன்றைய தினம் காலமானார்.

திரையுலகினர் இரங்கல்: துரைக்கு மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். 84 வயதான துரை, கடந்த சில காலங்களாக உடல்நலக்குறைவால் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதையடுதது அவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1974ம் ஆண்டில் வெளியான அவளும் பெண் தானே என்ற படம் மூலம் துரை திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.

2 தேசிய விருதுகளை பெற்ற பசி படம்: கடந்த 1978ம் ஆண்டில் வெளியான ஒரு வீடு ஒரு உலகம் படத்திற்காக துரைக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து 1982ம் ஆண்டில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இருந்த போதிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பசி கொண்டாடப்படுகிறது. துரை மறைந்தாலும் அவரது பசி படத்தின்மூலம் அவர் என்றென்றும் கொண்டாடப்படுவார். அவரது உடல் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளைய தினம் தகனம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X