பாய்காட்டுக்கு டாட்டா.. 3 நாட்களில் 300 கோடியை நெருங்கிய பதான்.. ஆலியா பட் போட்ட அசத்தல் டான்ஸ்!
மும்பை: பாலிவுட் படங்கள் வெளியாகும் போது கூடவே பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி படத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியதாக ஒரு மாயை இருந்த நிலையில், ஷாருக்கானின் பதான் திரைப்படம் அதனை அதிரடியாக அடித்து நொறுக்கி இருக்கிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோனின் அந்த உச்சகட்ட கவர்ச்சி ஆட்டத்தையும், அதில் தீபிகா படுகோன் அணிந்த பிகினி உடையின் நிறத்தை வைத்தும் மிகப்பெரிய போராட்டாங்கள் வெடித்தன.
ஆனால், படம் வெளியான பின்னர் அதெல்லாம் சுக்குநூறாக உடைந்து 3 நாட்களில் 300 கோடி வசூலை பதான் நெருங்கி வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஷாருக்கான் பார்ட்டி வைத்துள்ளார்.

பாலிவுட்டை மீட்ட பாட்ஷா
பாலிவுட் திரையுலகம் துவண்டு கிடந்த நிலையில், கடந்த ஆண்டு ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி, தபு பேயாக நடித்த புல் புலாயா 2 உள்ளிட்ட படங்கள் 200 கோடியை தாண்டின. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஷாருக்கான் கேமியோவாக நடித்த நிலையில், அந்த படம் 400 கோடி வசூலை கடந்தது. ஆனால், இதெல்லாம் பத்தல பத்தல என இருந்த பாலிவுட் திரையுலகத்திற்கு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக இந்த ஆண்டின் முதல் படமாக வெளியாகி உள்ள ஷாருக்கானின் பதான் மாறி உள்ளது.

பாய்காட்டுக்கு டாட்டா
அமீர்கானின் லால் சிங் சத்தா படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், பாய்காட் பாலிவுட் கேங்கால் தான் படம் ஃபிளாப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், ரியல் என்டர்டெயின்மென்ட்டுக்கு ரசிகர்கள் எப்போதுமே வரவேற்பு கொடுக்கத் தவறுவதில்லை என்றும் ரசிகர்களுக்கு தேவையான படங்களை கொடுக்காமல் ரீமேக் படங்களை கொடுத்ததால் வந்த வினை தான் என்பதை பாலிவுட் திரையுலகம் புரிந்து கொண்டால் சரி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

3 நாளில் 300 கோடியை நெருங்கிய வசூல்
ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் 280 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வசூல் வேட்டையை பாலிவுட் திரையுலகில் நடத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓட உள்ள நிலையில், இந்த வார இறுதிக்குள் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் கொடுத்த பார்ட்டி
ஷாருக்கானின் பதான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ஷாருக்கான் தனது வீட்டில் நேற்று இரவு பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில், நடிகை ஆலியா பாட், தீபிகா படுகோன், அவரது கணவர் ரன்வீர் சிங் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆலியா பட் டான்ஸ்
இந்நிலையில், ஷாருக்கானின் மனாத் இல்லத்தில் நடைபெற்ற பார்ட்டியில் வாயில் ஸ்பூனை வைத்துக் கொண்டு ஆலியா பட் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் பின்னால் நடிகர் ரன்வீர் சிங்கும் நடனமாடி பதான் படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

3 படங்கள்
ஷாருக்கானின் பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியான நிலையில், அடுத்ததாக இயக்குநர் அட்லியின் ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதியும் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படம் தீபாவளிக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வசூல் வேட்டையை நிகழ்த்த ஒரு முடிவுடன் ஷாருக்கான் இருப்பது தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











