இரண்டே நாளில் 200 கோடி வசூலை நெருங்கும் பதான்... தெறித்து ஓடிய ஷாருக்கான் ஹேட்டர்ஸ்

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

காவி பிகினி சர்ச்சையால் பாய்காட் பதான் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது பதான் பாக்ஸ் ஆபிஸ் ஹேஷ்டேக்கை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான பதான், முதல் நாளிலேயே 100 கோடி வசூலை கடந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிவில் பதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் புதிய சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பொய்யான பாய்காட் பதான்

பொய்யான பாய்காட் பதான்

ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட, இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஒருதரப்பினர் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். ஏற்கனவே கடந்தாண்டு இந்தியில் வெளியான பல திரைப்படங்கள் பாய்காட் பிரசாரத்தால் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தன. அதனால் பதான் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆனால் ஷாருக்கானின் பதான், பாய்காட் பிரசாரத்தை எல்லாம் அடித்து நொறுக்கியதோடு பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்க பான் இந்தியா படமாக உருவான பதான் 25ம் தேதி வெளியானது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே, வில்லனாக ஜான் ஆப்ரஹாம் கேமியோ ரோலில் சல்மான் கான்ம் நடித்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பதான் முதல் நாளில் 100 கோடி வசூலை கடந்தது.

முதல் நாளில் 100 கோடி

முதல் நாளில் 100 கோடி

இந்தியாவில் மட்டுமே முதல் நாளில் 60 கோடி வரை வசூலை எட்டிய பதான், உலகம் முழுவதும் ரூ.106 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் பதான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் வேகமெடுத்தன. இதனால் முதல் வாரம் முழுவதும் பதான் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

200 கோடியை நெருங்கும் வசூல்

200 கோடியை நெருங்கும் வசூல்

பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் எல்லாவற்றையும் பொய்யாக்கிய ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டை பரிசாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பதான் ரிலீஸான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் 125 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் என கடந்தாண்டு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த படங்களின் சாதனையை, இரண்டே நாட்களில் செய்துகாட்டியுள்ளது பதான். மேலும், இந்த வசூலால் பாய்காட் பதான் என ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்த ஷாருக்கான் ஹேட்டர்ஸ், இருக்கும் இடம் தெரியாமல் தெறித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. பதான் படத்தின் வெற்றியால், ஷாருக்கான் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ஜவான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை அட்லீ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X