பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை கடந்த பதான்... ஷாருக்கானின் ரியல் சம்பவம்... மிரண்டுபோன பாய்காட்டர்ஸ்

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியானது.

ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், கெஸ்ட் ரோலில் சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப் படம்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான பதான், காவி பிகினி சர்ச்சையால் பாய்காட் பிரச்சினையில் சிக்கியது.

இதனால் வசூல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேரெதிராக பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்து வருகிறது பதான்.

 ஷாருக்கானின் ரியல் சம்பவம்

ஷாருக்கானின் ரியல் சம்பவம்

ஷாருக்கான் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹீரோவாக நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி பிகினியில் ஆட்டம் போட்டது சர்ச்சையானது. இதனால் நெட்டிசன்கள் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். மேலும் பல இடங்களில் பதான் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என பஜ்ரங்தள அமைப்பினர் போராட்டங்களும் நடத்தினர். ஆனாலும் சொன்னபடி 25ம் தேதி ரிலீஸான பதான் ஷாருக்கானின் ரியல் சம்பவமாக மாஸ் காட்டியுள்ளது.

 இந்தியாவில் 200 கோடி

இந்தியாவில் 200 கோடி

ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாய்காட் பிரசாரத்தை அடித்து நொறுக்கியதோடு பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான், ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மேலும் பான் இந்தியா படமாக வெளியானதால், இந்தி மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், பதான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 201 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 ஓவர்சீர்ஸ் கலெக்‌ஷன் 100 கோடி

ஓவர்சீர்ஸ் கலெக்‌ஷன் 100 கோடி

இந்தியாவில் 166 கோடி முதல் 201 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் 112 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பதான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் பல இடங்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக காணப்படுகிறதாம். எனவே வார இறுதி நாளான இன்றும் பதான் வசூல் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 300 கோடியை கடந்த வசூல்

300 கோடியை கடந்த வசூல்

பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் எல்லாவற்றையும் பொய்யாகிய ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டை பரிசாக கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 201 கோடி, மற்ற நாடுகளில் 112 கோடி என உலகம் முழுவதும் மொத்தம் 313 கோடி ரூபாய் வசூலித்து மரண மாஸ் காட்டியுள்ளது பதான். கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் என கடந்தாண்டு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த படங்களின் சாதனைகளுக்கு சவாலாக வெளியாகியுள்ள பதான், விரைவில் 500 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதான் படத்தின் வெற்றியால், ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை அட்லீ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X