Pathaan: அட்லீயே பரவாயில்லை போல.. ஜாக்கி சான் கார்ட்டூனை காப்பியடித்த பதான் இயக்குநர்.. வீடியோ இதோ!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஃபேன், ஜீரோ படங்கள் சொதப்பிய நிலையில், 4 ஆண்டுகள் புதிய படங்களை வெளியிடாமல் இருந்த ஷாருக்கான் இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி பதான் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தார்.

ஏற்கனவே அந்த படம் டாம் க்ரூஸ் படத்தின் காப்பி என சொல்லி வந்த நிலையில், தற்போது ஜாக்கிசான் சாகசங்கள் கார்ட்டூனில் இருந்து இடைவேளை காட்சியை அப்படியே இயக்குநர் சித்தார்த் ஆனந்த் காப்பி அடித்திருக்கிறார் என வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Pathaan interval scene copied from Jackie Chan adventures cartoon?

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலியே ஒவ்வொரு ஹாலிவுட் படத்தில் இருந்தும் காட்சிகளை உருவினார் என எடிட் வீடியோக்கள் போடப்பட்டு வரும் நிலையில், ஒரு கார்ட்டூன் காட்சியை அப்படியே படமாக்கி இருக்கிறார் சித்தார்த் ஆனந்த்.

ஷாருக்கானுக்கே சாம்பிராணி: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்த பதான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பாலிவுட்டையே கம்பேக் செய்ய காரணமாக இருந்தது.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் படத்தின் காட்சிகள் அப்படியே ஒரு கார்ட்டூனில் இடம்பெற்ற காட்சிகள் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஷாருக்கானுக்கே சாம்பிராணி போட்டுட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

Pathaan interval scene copied from Jackie Chan adventures cartoon?

அட்லீயே பரவாயில்லை: பல படங்களில் இருந்து கதைகளையும் காட்சிகளையும் அப்படியே புதிதாக இயக்குநர் அட்லீ தான் தனது படங்களில் வைத்து வருகிறார் என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அட்லீயே பரவாயில்லை. அவரை விட காப்பி அடிப்பதில் சித்தார்த் ஆனந்த் செம கெட்டிக்காரர் என ட்ரோல்கள் பறக்கின்றன.

ஜாக்கி சானின் சாகசங்கள்: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜாக்கி சானின் சாகசங்கள் கார்ட்டூனில் இருந்து ஜாக்கி சான் சண்டைப் போட்டுக் கொண்டே ஒரு ரயிலில் பயணிக்கும் போது எதிரி படைகள் பாலத்தை குண்டு வைத்து தகர்க்க, அந்த ரயிலில் இருந்து ஜாக்கி சான் எப்படி தப்பித்து பாலத்தை பிடித்து தொங்கிக் கொண்டு வருகிறாரோ அதே காட்சியை அப்படியே அச்சு பிசகாமல் எடுத்து வைத்திருக்கிறார் சித்தார்த் ஆனந்த் என்கின்றனர்.

Pathaan interval scene copied from Jackie Chan adventures cartoon?

சல்மான் கானும் சிக்கினார்: இதில், வேடிக்கை என்னவென்றால் ஷாருக்கான் மட்டுமின்றி இந்த காட்சியில் சல்மான் கானையும் நடிக்க வைத்து இருவருக்கும் சேர்த்து பட்டை நாமத்தை போட்டிருக்கிறார் சித்தார்த் ஆனந்த். இருவரையும் பார்த்து ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆனால் போதும், எங்கே இருந்து காட்சியை சுட்டேன் எனக் கண்டு பிடிக்கவா போகின்றனர் என்கிற தைரியத்தில் தான் சித்தார்த் ஆனந்த் இதை செய்திருக்கிறார் என பாலிவுட் ரசிகர்கள் அவரை பந்தாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X