500 கோடி வசூலை கடந்த பதான்.. ஷாருக்கானுக்கு பப்ளிக்கா முத்தம் கொடுத்த தீபிகா படுகோன்!

மும்பை: நடிகை தீபிகா படுகோன் பதான் சக்சஸ் மீட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான நிலையில், இதுவரை 500 கோடி வசூலை உலகளவில் கடந்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் அபிரகாம் உள்ளிட்ட நடிகர்கள் இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கிங் கான் இஸ் பேக்

கிங் கான் இஸ் பேக்

பாலிவுட் திரையுலகமே 200 கோடி வசூலை கூட எட்ட முடியாத நிலையில், ஏகப்பட்ட ஃபிளாப்களை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வந்த நிலையில், மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக பதான் திரைப்படம் மாறி உள்ளது. கிங் கான் இஸ் பேக் என ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

500 கோடி வசூல்

500 கோடி வசூல்


ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியான 7 நாட்களில் 500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் 400 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பதான் திரைப்படம் 500 கோடி வசூலை ஒரே வாரத்தில் அதிரடியாக கடந்துள்ளது.

சக்சஸ் மீட்

சக்சஸ் மீட்

பதான் படத்தின் வெற்றியை பாலிவுட் நடிகர்களுக்கு பார்ட்டி வைத்து சமீபத்தில் கொண்டாடிய ஷாருக்கான் நேற்று சக்சஸ் மீட் வைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து இருந்தார். அந்த விழாவில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பதான் படக்குழுவினர் பங்கேற்றனர்.

ஷாருக்கானுக்கு முத்தம்

ஷாருக்கானுக்கு முத்தம்

பதான் படத்தில் ஷாருக்கான் உடன் எல்லை மீறிய எரோட்டிக்கா மோடில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில், பப்ளிக்காக சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு நடிகர் ஷாருக்கானை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படங்களும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

ஹிட் ஜோடி

ஹிட் ஜோடி

தீபிகா படுகோன் பாலிவுட்டில் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் அறிமுகம் ஆனதில் இருந்தே ஷாருக்கான் உடன் அவர் இணைந்து நடித்த எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் தான். ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் படங்களை தொடர்ந்து பதான் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் கொடுத்த முத்தம்

ஷாருக் கொடுத்த முத்தம்

இப்படியொரு வெற்றியை பரிசளித்த படக்குழுவினருக்கு உருக்கமாக பாராட்டுக்களை தெரிவித்த ஷாருக்கான் நிகழ்ச்சியில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பதான் படத்தின் வில்லன் நடிகர் ஜான் ஆபிரகாம் கன்னத்தில் முத்தம் கொடுத்த வீடியோவும் ரசிகர்களை நெகிழச் செய்தது.

பதான் 2 வருது

பதான் 2 வருது

பதான் படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், பதான் 2 திரைப்படம் கண்டிப்பாக உருவாகும் என்கிற சிக்னலையும் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். ஏற்கனவே பதான் திரைப்படம் பாலிவுட்டின் ஸ்பை யூனிவர்ஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், டைகர் படத்தில் பதான் ஷாருக்கானும் அடுத்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இணைந்து பதான் 2 படத்தை உருவாக்கப் போவதாகவும் ஏகப்பட்ட கதைகள் உருவாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X