ஆத்தாடி இம்புட்டு விலையா? கிறுகிறுக்க வைக்கும் நயன்தாரா அணிந்து இருக்கும் வாட்ச் விலை!
சென்னை: நயன்தாரா அணிந்து இருக்கும் ரோலக்ஸ் வாட்சின் விலையை கேட்டு ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவரும் காதலித்தனர்.

ஆறு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, சில மாதத்திலேயே வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.
நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என கலக்கி வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படம் கடந்த மாதம் வெளியாகி பட்டையை கிளப்பி உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை வசூலித்தது. ஜவான் படத்தின் மூலம் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ள நயன்தாரா, தொடர்ந்து தன்னுடைய பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்த்த அளவு ஓடவில்லை: இந்த படத்தைத் தொடர்ந்து தமிழிலும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த இறைவன் படம் வெளியானது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கணவர் கொடுத்த பரிசு: இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்த வாட்ச் பற்றி பேசி இருந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த வாட்ச் ஆனது ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும். வாட்சை சுற்றி டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த வாட்சின் விலை, 23 லட்சம் முதல் 26 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனி பீரோ: நயன்தாரா அணிந்து இருக்கும் வாட்சின் விலையை கேட்டு ஷாக்கான நெட்டிசன்ஸ் , வாட்ச் வாங்குன காசுக்கு ஒரு வீடு கட்டி வாங்கிவிடலாம் போல என்றும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாட்ச் பிரியரான நயன்தாரா வாட்சுக்கு என்றே தனி பீரோவை வைத்து இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











