Don't Miss!
- News
ஆளுநர் டீ விருந்தை விசிக புறக்கணித்தால் செலவு மிச்சம்.. அதே வார்த்தையை மீண்டும் சொன்ன அண்ணாமலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
லெஜண்ட் ரிட்டர்ன்... ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டம்... பதான் ட்விட்டர் விமர்சனம் இதோ
மும்பை: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள பதான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
தீபிகா படுகோனேவின் காவி பிகினி சர்ச்சையால் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், இன்று வெளியான பதான் படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் ட்விட்டர் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம்.
ஷாருக்கானின் பதான் வெளியாக எதிர்ப்பு... போஸ்டர்களை தீ வைத்து கொளுத்தி போராட்டம்...

வெளியானது பதான்
பாலிவுட் பாட்ஷா, இந்தி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் பதான் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக ஜான் ஆப்ரஹாமும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷ்ரம் ரங்' பாடலில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தார். இது மிகவும் சர்ச்சையான நிலையில் பதான் படத்திற்கு எதிராக பாய்காட் பிரசாரம் தொடங்கியது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனால் பதான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட பதான் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஷாருக்கான் ரசிகர்கள் பதான் படத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்ளில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு சென்ற ரசிகர்கள், பதான் திரைப்படம் குறித்து டிவிட்டரில் தங்களது விமர்சனங்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் விமர்சனம்
இந்நிலையில், ஷாருக்கானின் ரசிகர்கள் சார்பில் பதான் படம் குறித்து டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பதான் சிறப்பாக வந்துள்ளதாகவும், ஷாருக்கானும் படக்குழுவும் கடுமையாக வேலை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் போட்டோ, வீடியோ எதையும் டிவிட்டரில் ஷேர் செய்ய வேண்டாம், அப்போது தான் திரையரங்குகளில் நல்ல அனுபவம் கிடைக்கும் எனவும் பதிவிட்டுள்ளனர்.

5 ஸ்டார் ரேட்டிங்
அதேபோல் இன்னொரு நெட்டிசன் பதான் படத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும், இந்தப் படம் கண்டிப்பாக ஷாருக்கானின் ரசிகர்களுக்கானது, அவரின் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமேக்ஸ் வரை ராக்கிங் பெர்பாமன்ஸ் செய்துள்ளார் என கூறியுள்ளார். தரமான ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள பதான் கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும், க்ளைமேக்ஸ் அட்டகாசம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

தரமான சம்பவம்
மேலும் ஒரு நெட்டிசன், பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைக்க ஷாருக்கான் ரெடியாகிவிட்டார். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான அசுரத்தனமான போரை பார்க்க ரெடியாக இருங்க என ஷாருக்கான், ஜான் ஆப்ரஹாம் இருவரது நடிப்பை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதேபோல், பதான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சூப்பர் கொண்டாட்டம், அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு உறுதியான பிளாக்பஸ்டர் என கூறி 4.75 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மோசமான கிராபிக்ஸ்
ஷாருக்கானின் பதான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், சில நெகட்டிவான கமெண்ட்ஸ்களும் வந்துள்ளன. ஷாருக்கான், காஸ்டிங், ஆக்ஷன் காட்சிகள், ரன்னிங் டைம், திரைக்கதை இது அனைத்தும் பதான் படத்தின் பாசிட்டிவ் என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் படத்தின் சில இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக உள்ளதாகவும், அதுவே இந்தப் படத்தின் நெகட்டிவ் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஒட்டுமொத்தமாக பதான் சூப்பரான ஸ்பை திரில்லர் என பாராட்டியுள்ளார். இதுவரை கிடைத்த தகவல்களின் படி ஷாருக்கானின் பதான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.