காயத்ரி சங்கரின் ‘பத்தினி’..டீசர் இன்று மாலை ரிலீஸ் !
சென்னை : கீர்த்திவாசன் இயக்கத்தில் காயத்ரி சங்கர் நடித்துவரும் பத்தினி குறும்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர்.
இவரது அமைதியான முகம் அமைப்பு, நேர்த்தியான நடிப்பால் பல ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.

முதல்படம்
2012ம் ஆண்டு வெளியான 18 வயது திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காயத்ரி சங்கர். இப்போதும் அதே பொலிவுடன் இளமை மாறாமல் இருக்கியார். வயது கூடிக்கொண்டே போனாலும் இவரது இளமை முகம் மாறவில்லை.

பல படங்கள்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை காயத்ரி ஷங்கர். விஜய் சேதுபதியின் ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் அடுத்தப் படமான மாமனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.
Recommended Video

குடும்பபாங்கனா கதாபாத்திரம்
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை விஜய்சேதுபதி பெற்றார். அப்படத்தில் இவர் திருநங்கையாக நடித்திருப்பார். இந்த பாடத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் அழகாக நடித்து இருப்பார் காயத்ரி. மேலும் ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தில் படத்திற்கு இவர்டப்பிங் பேசிஉள்ளார்.

டிரைலர்
குழந்தை முகம் வெள்ளந்தியான சிரிப்பு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர், விஜய்சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், கீர்த்திவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்தினி திரைப்படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











