ராட்சசனும் இவன்தானே ரட்சகனும் இவன்தானே.. பட்டையை கிளப்பும் பத்து தல பாடல்

சென்னை: பத்து தல படத்தின் நான்காவது சிங்கிளாக ஒசரட்டும் பத்து தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

கம்பேக்கில் கெத்து காண்பிக்கும் சிம்பு

கம்பேக்கில் கெத்து காண்பிக்கும் சிம்பு

மாநாடு படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த சிலம்பரசன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் படு உற்சாகத்துடன் இறங்கியிருக்கிறார். அந்தவகையில் மாநாடுக்கு பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார் சிம்பு. அதன்படி சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

மாஸ் காட்டிய பத்து தல ட்ரெய்லர்

மாஸ் காட்டிய பத்து தல ட்ரெய்லர்

சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்றாயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏஜிஆர் ராவணன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் சிம்புவை திரையில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாளம் போட வைக்கும் பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாளம் போட வைக்கும் பாடல்கள்

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் முதல் பாடலாக பட்டம் அடி பட்டம் பாடல் வெளியாகி பலரையும் ஆட வைத்தது. அந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். அதனையடுத்து அவரது மகன் அமீன் குரலில் வெளியான பாடலும் ஹிட்டானது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மானின் ரீ ரெக்கார்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

சாயிஷா நடனத்தில் வெளியான ராவடி

சாயிஷா நடனத்தில் வெளியான ராவடி

இந்தச் சூழலில் நேற்று முன் தினம் ராவடி பாடலின் வீடியோ வெளியானது. பாடலுக்கு ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா க்ளாமராக நடனம் ஆடியிருந்தார். பாடலும் மனதில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி பாடலின் வீடியோவை பார்த்த ஆர்யா தனது மனைவிக்கு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.

பத்து தல படத்தின் நான்காவது சிங்கிள்

பத்து தல படத்தின் நான்காவது சிங்கிள்

இந்நிலையில் பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒசரட்டும் பத்து தல பாடலின் லிரிக்கல் வெளியாகியிருக்கிறது. ராட்சஸனும் இவன்தானே, ரட்சகனும் இவன்தானே என பாடலின் வரிகள் கவனம் ஈர்க்கும்படி அமைந்திருக்கின்றன. பாடலை நட்டுராஜா துரை எழுத தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்யபிரகாஷ் பாடியிருக்கின்றனர். மேலும் இந்த லிரிக்கல் வீடியோவில் படத்தில் நடித்திருப்பவர்களின் கேரக்டர்கள் பெயரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X