பத்து தல டீம் எதுக்கு தயாராகியிருக்காங்க தெரியுமா.. இயக்குநர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
விரைவில் அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாக உள்ளது.
தற்போது பத்து தல படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் முடிய உள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றியடைந்து வருகின்றன. சிம்புவின் ஈஸ்வரன், மாநாடு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி அவருக்கு சிறப்பாக கைகொடுத்து வருகின்றன. குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த மாநாடு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

மாநாடு படம்
டைம் லூப் பாணியில் வெளியான இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் அவருக்கு மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக கைக்கொடுத்து. படத்தில் நடித்திருந்த எஸ்ஜே சூர்யாவிற்கும் இந்தப் படம் சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது.

வெந்து தணிந்தது காடு படம்
இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். ஐசரி வேலன் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

பத்து தல படத்தின் சூட்டிங்
இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சிம்புவின் அப்பா டிஆரின் உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அவர்மீது சிம்பு கவனம் செலுத்தினார். இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இயக்குநர் உறுதி
இந்நிலையில் இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். பத்துத் தல படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்கு தயாராகி விட்டதாகவும் சிம்புவின் அப்பா குணமடைந்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

இறுதிக்கட்ட சூட்டிங்
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த டிஆருடன் இருந்த அவரை கவனித்துவந்த சிம்பு, அவர் தேறியதையடுத்து சென்னை திரும்பியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் படம் டிசம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











