பத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்
சென்னை: சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் பத்து தல.
இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
பொங்கலன்று சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிம்பு & குடும்ப ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது ஈஸ்வரன் திரைப்படம்.

தொடர்ந்து கொண்டாட்டம்
பொங்கலன்று வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து பத்து தல குறித்த அப்டேட் வெளியாகி சிம்பு ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

பிரியா, டீஜே இணைந்தனர்
பத்து தல படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து பிரியா பவானி ஷங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் ஆகியோர் பத்து தல படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.

இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான்
அதை தொடர்ந்து இன்று மாலை 6:30 மணிக்கு இசை புயல்
ஏ. ஆர். ரஹ்மான் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











