Pathu Thala Collection - பத்து தல படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?. தோல்வியை சந்தித்தாரா சிம்பு?
சென்னை: Pathu Thala Collection (பத்து தல வசூல்) பத்து தல படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து தனது ரீ எண்ட்ரியில் சிம்பு முதல் தோல்வியை சந்தித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்கிய சிம்பு சில பிரச்னைகளால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக அவர் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் படுதோல்வியை சந்தித்தது. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த செக்கச்சிவந்தது வானம் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தொடர்ந்து கவனத்தை சினிமாவில் முழுதாக திருப்பிய சிலம்பரசன் உடல் எடையை குறைத்து முழு மூச்சாக இறங்கினார்.

மாஸ் காட்டிய மாநாடு: தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு படம் பெரும் வெற்றியை பெற்றது. ஒவ்வொரு காட்சியிலும் பழைய சிம்புவாக படு எனர்ஜியோடு நடித்ததை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். திரைக்கதையிலும் வெங்கட் பிரபு புதுமை செய்திருந்ததால் படம் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. இதன் காரணமாக சிம்புவின் ரீ எண்ட்ரி தரமாக அமைந்தது.
அடுத்த ஹிட் கொடுத்த சிம்பு: மாநாடு படத்தை அடுத்து எவர்க்ரீன் கூட்டணியான சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தை கொடுத்தது. முத்து என்ற கிராமத்து இளைஞராக தோன்றி பிறகு கேங்ஸ்டராக மாறுவது என தனது நடிப்பில் அந்த படத்துக்காக அசுர பாய்ச்சல் செய்திருந்தார் சிம்பு. இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு ஃபுல் பார்மில் இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.
கீழே விழுந்த பத்து தல: இப்படி தொடர்ந்து இரண்டு படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்களை கொடுத்துவிட்டு கன்னட படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் கமிட்டானார் சிம்பு. ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தி தனது பக்குவமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும் திரைக்கதையில் இருந்த சொதப்பலால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இதன் காரணமாக முதல் இரண்டு படஙக்ளை போன்ற வரவேற்பு கிடைக்கவில்லை.

பத்து தலயை அரெஸ்ட் செய்த விடுதலை: அதுமட்டுமின்றி பத்து தல ரிலீஸாகி அடுத்த நாள் வெளியான விடுதலை படத்தின் கதையும், மேக்கிங்கும் சிறப்பாக இருந்ததன் காரணமாக ரசிகர்களின் கவனம் அந்தப் படத்தின் பக்கம் திரும்பியது. எனவே கூட்டமும் விடுதலையை நோக்கி நகர்ந்தது. முதல் வார வசூலிலேயே பத்து தல படத்தை விடுதலை படம் பீட் செய்துவிட்டதாக பலரும் கூற ஆரம்பித்தனர்.
மொத்த வசூல் எவ்வளவு?: இந்நிலையில் பத்து தல படத்தின் மொத்த வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூல், வெந்து தணிந்தது காடு 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் என இருக்கும் நிலையில் பத்து தல 40 கோடி ரூபாய்வரைதான் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால், இந்தப் படம் சிம்புவின் ரீ எண்ட்ரியில் முதல் தோல்வி படமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











