Pathu Thala Video Song - நீ சிங்கம்தான் - பத்து தல வீடியோ சாங்கை கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: Pathu Thala Video Song (பத்து தல வீடியோ சாங்) பத்து தல படத்தின் நீ சிங்கம்தான் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு மாநாடு படம் பக்கா கம்பேக்காக அமைந்தது. டைம் லூப்பை மையமாக வைத்து உருவான அந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. அந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் கமிட்டானார். அந்தப் படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. எனவே சிம்பு ஃபுல் பார்மில் திரும்பிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்த சிம்பு: வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்தார். கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவான இப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது, இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்தனர் சிம்புவும், அவரது ரசிகர்களும்.
சிம்புவை ஏமாற்றிய பத்து தல?: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதுமட்டுமின்றி மஃப்டி படத்தின் ரீமேக் என அறிவிக்கப்பட்ட இப்படம் அப்படத்தை போல இல்லை என ரசிகர்கள் கூறினர். சிம்பு சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தின் மேக்கிங்கில் இயக்குநர் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் கூறினர்.

பத்து தல படத்தின் வசூல் என்ன?: மார்ச் 30ஆம் தேதி படம் வெளியான சூழலில் முதல் நாளில் 12 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுவரை அப்படம் 50 ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க மார்ச் 31ஆம் தேதி வெளியான விடுதலை படம் பத்து தல படத்தை வசூலில் கூடிய சீக்கிரம் பீட் செய்துவிடும் என்ற கருத்தே நிலவுகிறது. அதுமட்டுமின்றி சிம்புவுக்கு இது பலத்த அடி என்றும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். எனவே பத்து தல படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்காததால் எஸ்டிஆர் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.
நீ சிங்கம்தான் பாடலின் வீடியோ வெளியானது: படம் எப்படிப்பட்ட ரிசல்ட்டை கொடுத்தாலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றன. குறிப்பாக அக்கரையில நிக்குறவன் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தச் சூழலில் பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் நீ சிங்கம்தான் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தப் பாடலின் வீடியோ மிகப்பெரிய வரவேற்பை ரசிகரக்ளிடையே பெற்றுவருகிறது.


Click it and Unblock the Notifications











