பத்து தல செகண்ட் சிங்கிள்... சிம்புவுக்கு பதில் ஏஆர் ரஹ்மான்... இது கொஞ்சம் சஸ்பென்ஸ் அப்டேட்!
சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பத்து தல படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து படக்குழு சிறப்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிம்புவின் பத்து தல
சிம்புவின் 48வது படம் குறித்த அப்டேட் நேற்று மாலை வெளியானது. STR 48 என்ற டைட்டிலில் வெளியான இந்த அப்டேட் சிம்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் ஏராளமான சஸ்பென்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் வெளியானதில் இருந்து STR 48 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல செகண்ட் சிங்கிள் அப்டேட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்புவுக்கு பதில் ஏஆர் ரஹ்மான்
கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 30ம் தேதி வெளியாகிறது. முன்னதாக பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட்டடித்தது. அவரே பாடியிருந்த 'நம்ம சத்தம்' என்ற பாடலின் வைப் இன்னும் குறையவே இல்லை. அதுமட்டும் இல்லாமல், சில தினங்களுக்கு முன்னர் பத்து தல டீசரும் வெளியாகியிருந்தது. ஏஆர் ரஹ்மானின் தெறிக்கவிடும் இசையில் சிம்பு ரியல் கேங்ஸ்டராக மரண மாஸ் காட்டியிருந்தார்.

கிளிம்ப்ஸ் வீடியோவுடன் அப்டேட்
இதன் தொடர்ச்சியாக அடுத்து பத்து தல செகண்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாம். மனதை உருக்கும் அட்டகாசமான மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடல், சிம்பு ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவில் ஏஆர் ரஹ்மான் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஏஆர் ரஹ்மான் இந்தப் பாடலின் கம்போஸிங்கில் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் க்ளிம்ப்ஸாக வெளியாகிறதாம்.

மீண்டும் ட்ரெண்டிங் வந்த பத்து தல
இந்த செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியானதில் இருந்து மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது பத்து தல. ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் இரண்டிலும் ஏஆர் ரஹ்மானின் இசை மரண மாஸ்ஸாக இருந்தது. ஆனால், இந்த மெலடி அதற்கெல்லாம் நேர் எதிராக இருக்கும் என சொல்லப்படுகிறது. சிம்பு - ஏஆர் ரஹ்மான் காம்போவில் மீண்டும் ஒரு அமர்க்களமான ட்ரீட் கன்ஃபார்ம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா?
இந்நிலையில், பத்து தல ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மார்ச் 18ம் தேதி பத்து தல இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளதால், பத்து தல இசை வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிம்புவின் நம்பிக்கை
கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது. கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள பத்து தல, சிம்புவிற்கு இன்னொரு சூப்பர் ஹிட்டாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











