பத்து தல டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத சிம்பு.. கவுதம் கார்த்திக் என்ன சொன்னார்?
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல டீசர் தற்போது எளிமையான விழாவுடன் வெளியானது. இந்த விழாவில் நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை. பத்து தல படத்தில் நடித்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் விழாவில் கலந்து கொண்டு பேசியது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பத்து தல திரைபப்டம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது.
வரும் மார்ச் 18ம் தேதி பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மிரட்டும் பத்து தல
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் பத்து தல. கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கவுதம் மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிப்புகள் வெளியான நிலையில், பின்னர் அவரது போர்ஷன் பெரிதுப்படுத்தி இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க சிம்பு படமாகவே பத்து தல உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அசத்தலான டீசரிலும் சிம்புவின் மாஸ் என்ட்ரி தான் இடம்பெற்றுள்ளது.

சிம்பு வரவில்லை
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு வரவில்லையே ஏன் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குநர் கிருஷ்ணா, நடிகர் சிம்பு வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.

பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்
ஆனால், வரும் மார்ச் 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக சிம்பு கலந்து கொள்வார் என உறுதி அளித்துள்ளனர். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் லைவ் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.

கவுதம் கார்த்திக் உறுதி
நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்ட நிலையில், கவுதம் கார்த்திக் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. 1947 மற்றும் பத்து தல படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவுதம் கார்த்திக் நம்ம படம் நான் கலந்துக்காம எப்படி என பேசினார். மேலும், இன்னொரு விஷயத்தையும் ரசிகர்களுக்காக உறுதி அளித்துள்ளார்.

அந்த படம் மாதிரி இருக்காது
மஃப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல இருந்தாலும், இந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணா படத்தை முற்றிலும் வேறு விதமாக அணுகியிருக்கிறார். சிம்புவின் போர்ஷன் கூடுதலாக உள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு இந்த படம் இருக்கும் என கவுதம் கார்த்திக் கூறியுள்ளார். வரும் மார்ச் 30ம் தேதி சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











